பெண்ணொருவர் தன்னைக் கடித்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மதுரை அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாண்டியம்மாள் (45). கணவனை இழந்த பெண்மணியான இவர், காலை வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது சுமார் 6 அடி நீள கட்டுவீரியன் பாம்பு இவரைக் கடித்ததாம். உடனே அந்தப் பாம்பை எடுத்து சுழற்றி தரையில் அடித்து, அரைகுறை உயிருடன் தூக்கிக் கொண்டு மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
பாம்பைக் கையில் எடுத்துக் கொண்டு அவசரக் கோலத்தில் வரும் பெண்மணியைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து, மருத்துவரின் மேஜையில் பாம்பைப் போட்டுவிட்டு, தனக்கு மருத்துவம் பார்க்குமாறு பாண்டியம்மாள் கூறவும், மருத்துவர்களுக்கு மயக்கம் வராத குறைதான்.
பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பாம்போ, நாயோ கடித்தால் அதனையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை என்று கூறினர்.
Home »
Amazing
» தன்னைக் கடித்த 6 அடி நீள கட்டுவீரியன் பாம்பை மருத்துவமனைக்கு கையில் எடுத்துச்சென்ற பெண்!
தன்னைக் கடித்த 6 அடி நீள கட்டுவீரியன் பாம்பை மருத்துவமனைக்கு கையில் எடுத்துச்சென்ற பெண்!
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 11:57 PM
Related articles
- முதுமை எவ்வாறு ஏற்ப்படுகின்றது? கவனியுங்கள்!
- உலகில் உயிர்வாழும் வயதான நபருக்கான உரிமையைக் கோரும் எதியோப்பிய விவசாயி!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- கருவில் வளரும் 6 மாத சிசுவுக்கு இருதய அறுவை சிகிச்சை!
- நெற்றியில் மூக்கு வளர்த்த அதிசய சீன நபர்!
- திருமணம் முடிந்த கையோடு உயிரை விட்ட பெண்: நெஞ்சை நெகிழவைத்த காதல்!
Labels:
Amazing
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !