Headlines News :
Home » » இந்தியாவின் பண்டைய வரலாறும்: ஓர் பாலுறவும்!

இந்தியாவின் பண்டைய வரலாறும்: ஓர் பாலுறவும்!

Written By TamilDiscovery on Wednesday, July 3, 2013 | 1:05 AM

கி.பி பதின்மூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆப்கானிய மன்னர்கள் ஆட்சியில் (மொகாலய ஆட்சிக்கு முன்பு) ஓரினசேர்க்கை இயல்பாக கருதப்பட்டது.

அந்த அலாவுதீன் கில்ஜி மன்னராக பொறுப்பேற்பதற்காக தன் மாமாவை (மன்னர் ஜலாலுதீன் கில்ஜியை) நயவஞ்சகமாக கொன்றுவிட்டு அரியணை ஏறினான். அத்தோடு, மன்னர் ஒருவரையே நான் சொன்ன ஆசை வார்த்தைகளை கேட்டு கொல்ல முயன்றார்கள் என்றால், எப்போது வேண்டுமானாலும் தன்னையும் கொல்ல முயல்வார்கள் என்று நினைத்த அலாவுதீன், தன் சகாக்களையே கொன்றார். அத்தோடு நில்லாமல் தன் பதவிக்கு போட்டியாக இருப்பார்கள் என்று நினைத்து. அனைத்து வாரிசுகளையும் (பத்து வயது குழந்தை உட்பட) கொன்றார். தன் விசுவாசமான தளபதி ஜாபர் கான், தன்னைவிட அதிக புகழ் பெறுகிறான் என்ற காரணத்தால் அவர் போரில் இறந்தபோது சந்தோஷப்பட்டார்.

அப்படி யாரையும் நம்பாமல் இருந்த அலாவுதின் இந்த உலகில் ஒருவரை மட்டும் நம்பினான் என்றால், அது "மாலிக் கபூர்" தான். குஜராத்தில் ராஜபுத்திர மன்னர் ராய் கர்ண தேவா என்ற மன்னரை எதிர்த்து போரிட்டு, குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்கம், வைரம் நகைகளுடன் இந்த மாலிக் கபூர் என்ற அடிமையும் ஒருவன்.மாலிக்கை சிலர் அரவாணி என்று கூறுகிறார்கள், அரவாணிக்கும் ஓரின பிரியருக்கும் வித்தியாசம் தெரியாத வரலாற்று ஆசிரியர்கள் மாலிக்கை அரவாணி என்று சொல்கிறார்கள், நிச்சயம் அவன் ஓரின விருப்பம் கொண்ட ஆண் தான் என்கிறார்கள் சிலர். அவன் அலாவுதீன் கில்ஜியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்து அடிமையாக இருந்த அவன், பிரதம மந்திரியாக பதவி உயர்ந்தான். வீரத்திலும் மாலிக் கபூர் சளைத்தவன் இல்லை. மதுரை வரைக்கும் வந்து போரிட்டு வென்ற ஒரே முஸ்லிம் தளபதி மாலிக் கபூர் தான். மாலிக்கின் வருகைக்கு பிறகு அலாவுதீன் கில்ஜியின் புகழும், நிலபரப்பும் விரிவடைந்தது. வருடங்கள் செல்ல செல்ல மாலிக் வைத்ததுதான் சட்டம் என்னும் நிலைமை ஆகிவிட்டது. சிலர் மாலிக் பற்றி மன்னரிடம் போட்டுக்கொடுத்து அவர் மனதை மாற்றினாலும், மறுகணமே மாலிக் மன்னரின் அருகில் அமர்ந்து மன்னரை தழுவினால், அத்தனை நினைவுமே காணாமல் போய்விடும். அந்த அளவிற்கு மாலிக்கின் ஸ்பரிசத்தில் தன்னை இழந்து கிடந்தார் மன்னர்.

ஒரு கட்டத்தில் மன்னர் அருகில் அமர்ந்து, மன்னரை மெலிதாக வருடி, "மன்னா, உங்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரிந்தவுடன், மகாராணியார் மற்றும் இளவரசர் ஆகியோர் உங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள்" என்றான் மாலிக் கபூர். இதற்கு பிறகு சொல்லவா வேண்டும், உடனே தன் மனைவி, பிள்ளைகளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மன்னர். பின்னர் தானே எல்லாமுமாக மாறிவிட்டான் மாலிக். எல்லோரையும் வஞ்சகத்தால் கொன்ற அலாவுதீன் கில்ஜியை, ஒரு நாள் விஷம் வைத்து கொன்றான் மாலிக் கபூர் பின்னர் ஆட்சியை தன் கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்டம் போட்ட மாலிக்கை, அவன் தளபதிகளே தீர்த்துக்கட்டி ஆட்சியை இளவரசர் முபாரக் கையில் ஒப்படைத்தனர்.

அலாவுதீன் இறந்து சரியாக முப்பத்தைந்தாம் நாள், மாலிக் கபூரும் அதே போல நயவஞ்சகமாக தீர்த்துக்கட்டப்பட்டான். அதைப்போல, ஆட்சிக்கு வந்த முபாரக்கும் ஓரின பிரியன். தந்தையைவிட ஓரினசேர்க்கையில் அதிகம் ஈடுபாடுகொண்ட முபாரக் கில்ஜியின் ஆட்சி பெரும்பாலும் அந்தப்புரத்தில் மட்டுமே கழிந்தது. அந்தப்புரம் என்றால், பெரும்பாலும் ஆண்களும், அரவாணிகளும்தான் அங்கிருப்பார்கள். அலாவுதினுக்கு ஒரு மாலிக் கபூர் போல, முபாரக்கிற்கும் ஒரு மல்லிக் குஸ்ரு. மல்லிக் ஒரு இந்து. அலாவுதினுக்கும் மாலிக் கபூருக்கும் நடக்கும் காம லீலைகள் எல்லாம் நான்கு சுவருக்குள் மட்டும்தான் நடக்கும். ஆனால், முபாரக் - மல்லிக் இச்சைகள் எல்லாம் போது இடத்திலும் நடக்கும். இதைக்கண்டு பல அமைச்சர்கள் தலையில் அடித்துக்கொண்டு போவார்கள். பெரும்பாலும், மல்லிக் பெண்ணுடை தரித்து, மன்னர் முன் ஆட, தன்  உலகையே மறந்துவிடுவான் முபாரக்.

அத்தகைய தருணத்தில் போர் வந்தால்கூட, பிறகு பார்த்துக்கலாம் எனும் அளவிற்கு மன்னர் இன்பத்தில் மூழ்கி இருப்பாராம். நாளாக நாளாக அரண்மனை செயலிழந்து, அங்கு விபச்சாரிகளும், காமரசம் சொட்டும் கவிதைகள் பாடும் புலவர்கள் மட்டுமே நிரம்பி இருப்பார்களாம். இறுதியில் அலாவுதினுக்கு நேர்ந்ததைப்போல, முபாரக்கிற்கும் நயவஞ்சகமாக உயிர் பறிக்கப்பட்டது. கொஞ்ச நாட்களில் மல்லிக்கும் அதே போல கொல்லப்பட்டான். பொதுவாக ஆப்கானிய மற்றும் மொகாலய மன்னர்களின் ஆட்சியை பற்றி படித்தால், அதில் ஆட்சித்திறனை விட அதிகமாக பழிவாங்கல் தான் இருக்கும். அது போல, அலாவுதீன் மற்றும் முபாரக்கின் வாழ்வையும் எடுத்துக்கொண்டாலும், இந்த மன்னர்கள் கே என்பதால், இத்தகைய விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டனவா? என்பதும் தெரியவில்லை.சிறந்த நிர்வாகம் என்றால் அது அலாவுதீன் கில்ஜியின் நிர்வாகம் என்று பலர் கூறுகிறார்கள், பஞ்சத்தில் கூட மக்கள் வறுமையில் வாடாத அளவிற்கு கில்ஜி செம்மையாக ஆட்சி செய்ததாக கூறினாலும், ஏனோ இந்த மன்னர்களின் கொலைகளும், அந்தரங்கங்களும் மட்டும்தான் பெரிதாக பேசப்படுகிறது.

நிச்சயம் அவர்கள் கே என்றதுமே, அந்த மன்னர்கள் நயவஞ்சகர்கள் என்ற எண்ணம் தோன்றியதன் விளைவுதான் இவ்வளவு விஷயங்களுக்கும் காரணமாக இருக்குமோ? என்றும் யோசிக்க தோன்றுகிறது. சரி, ஆனாலும் அநேகமாக உறுதிப்படுத்தப்பட்ட ஓரினசேர்க்கையாளர்கள் பற்றிய தகவலால், மற்ற நாடுகளைவிட இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது. ஆனால், தமிழ் மன்னர்கள் எவரை பற்றியும் இப்படி ஒரு தகவல்கள் கிடைக்கவில்லை.

மகாபாரதத்தில் அரவானுடன் கிருஷ்ண பகவான் புணர்ந்ததும் அறிந்ததே. அய்யப்பன் என்கின்ற கடவுள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. பதினான்காம் நூற்றாண்டின் சமஸ்கிருத, பெங்காலி இலக்கியங்கள் (இன்றளவும் மிகப்பிரபலமான கீர்த்திவாச ராமாயணம் உட்பட) பாகிரத மன்னன் (கங்கை நதியைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தவன்) இரண்டு விதவைப்பெண்களுக்குப் பிறந்ததாகக் கூறுகிறது. பாகிரதன் என்ற பெயரே இரண்டு பெண்ணுறுப்புகளுக்குப் பிறந்தவன் என்ற பொருளைத் தருகிறது. (Bhaga - Vulva) இந்து மருத்துவ நூல்களும் முதல் நூற்றாண்டிலிருந்தே பால், பால்வேறுபாடு, ஓரினச்சேர்க்கை விருப்பு ஆகிய அறிவியல் ரீதியான பாகுபாடுகளை விளக்குகின்றன.

காமசூத்ரா நூலும் ஓரினச்சேர்க்கையை மூன்றாம் இயற்கை என்று வருணிக்கிறது. கணிதமேதை சகுந்தலா தேவி எழுதிய ‘The world of Homosexuals’ (1977) நூலில், திருவரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சீனிவாச ராகவாச்சாரியார் அளித்த பேட்டியில், ஓரினக் காதலர்கள் முன்ஜென்மத்தில் மாற்றினக் காதலர்களாகத் தான் இருந்திருப்பார்கள். இப்பிறவியில் பால் மாறியிருந்தாலும், அவர்களுடைய ஆன்மாவின் ஈர்ப்பு அப்படியே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.  பண்டைய மன்னர்கள் கட்டிய கோவில்கள் (குறிப்பாக கஜுஹாரோ) சிற்பங்கள் பலவற்றிலும் ஓரின சேர்க்கை தொடர்பான சிற்பங்கள் இருந்ததை பார்கலாம்!
Share this article :

3 comments:

 1. இது ஒரு வருடத்திற்கு முன்பாக நான் எழுதிய கட்டுரை.... என் வலைப்பூவில் இருக்கும் அனைத்து பதிவுகளும் சிருஷ்டி அமைப்பால் காப்புரிமை பெறப்பட்டுள்ளது... இந்த பதிவை இங்கு பதிந்தது யார்? எதற்காக பதிந்தீர்கள்? என்று எனக்கு புரியவில்லை.... ஒரு படைப்பை உருவாக்க எவ்வளவு சிரமங்கள் படவேண்டும் என்று படைப்பவனுக்குத்தான் தெரியும்... அதை ரொம்ப எளிதாக காப்பி, பேஸ்ட் செய்வது நியாயமா?

  http://envijay.blogspot.in/2012/10/blog-post_5.html

  ReplyDelete
 2. We own the copyright's for all Tamil queer writings done by few social activist's Vijay Vicky is one among them. Any one who use the Article, Story ,Poem or any means of literary and research work without a prior permission of the author or Srishti Madurai . Even after getting official permission the person who is publishing the story should mention the source and name of the author or the writer or the compiler or the poet or the editor of the particular work. The person who violate such rules need to face us legally moreover a complaint will be launched to the cyber police on the basis of copyrights violation and news violation and using such stories for commercial purpose with the intend of making money is strictly prohibited. - Srishti Team

  ReplyDelete
 3. அது உங்கள் காப்பிரைட்டாகவே இருக்கட்டும். நானும் ஒரு எழுத்தாளன் தான். கஷ்டப்பட்டு நீங்கள் எழுதிய எழுத்துகள் இந்த உலகிற்குத் தெரிய வேண்டாமா?

  ReplyDelete

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template