இந்த வாரம் இராசி நாயகர்களின் வரம் உங்களுக்கு எவ்வாறு உள்ளது?
மேஷம்:
சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். பண வரவுக்கு குறைவிருக்காது. பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரக்கூடும். குடும்பத்துடன் வெளியூர் சென்றுவரக்கூடும். சிலர் வேறு வீட்டுக்கு மாற வேண்டிய நிலை ஏற்படும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் விருப்ப ஓய்வு பெற்று செல்லக்கூடும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். வேலை பளு அதிகரிக்கும்.
ரிஷபம்:
எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறும். பூர்வீக சொத்துக்களை பாதுகாப்பதில் கவனமாக இருக்கவும். வீடு மாற்ற இது உகந்த வாரம். வெளிநாட்டில் இருந்து மனம் மகிழும் செய்தி வரும். பெண்களுக்கு: கணவர் மீது பாசமழை பொழிவீர்கள். குடும்பத்தார் சந்தோஷமாக இருப்பார்கள். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கவும்.
மிதுனம்:
எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். கடிதம் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். பெண்களுக்கு: குடும்பத்தில் அமைதி இருக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: இத்தனை நாட்கள் உங்களை வாட்டிய பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கடகம்:
உங்கள் காரியங்களை தடைகளை தாண்டி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். உங்கள் வசீகரமான பேச்சால் பிறரைக் கவர்வீர்கள். பெண்களுக்கு: புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வீர்கள். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். அதனால் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்:
சமுதாயத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகரிக்கும். வீடு வாங்க இது உகந்த வாரம். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். பெண்களுக்கு: உறவினர் வருகை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து மகிழ்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அதிநவீன பொருட்கள் வாங்குவீர்கள். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: பண வரவு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறலாம்.
கன்னி:
உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். உடல் நலம் பாதிக்கக்கூடும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நெருக்கமானவர்களுடன் பிரச்சனை ஏற்படலாம். பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாமல் மனதை போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: நீங்கள் எதிர்பார்த்தபடியே பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழ்வீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்க தாமதமாகலாம்.
துலாம்:
சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடன் பிறப்புகள் உதவி செய்வார்கள். மனம் மகிழும் செய்தியைக் கேட்பீர்கள். பெண்களுக்கு: வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த மகிழ்வீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சிலருக்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
விருச்சிகம்:
உங்கள் காரியங்கள் அதிக முயற்சிக்கு பிறகே வெற்றிகரமாக முடியும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் நன்மை இல்லை. பெண்களுக்கு: கணவருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர் வீட்டுக்கு சென்று வருவீர்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களை கூற வேண்டாம். உங்கள் வேலையை புரிந்து கொண்டு நிதானமாக செய்யவும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும்.
தனுசு:
தக்க நபர்களின் உதவியுடன் உங்கள் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும். சிலர் புனித யாத்திரை சென்றுவரக்கூடும். செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு: கணவர் அன்பாக இருப்பார். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பெரியவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். அதனால் கால, நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்கள் பாராமுகமாக இருப்பார்கள். எதிலும் நிதானமாக இருக்கவும்.
மகரம்:
உங்களின் திறமை மேம்படும். வெற்றி மேல் வெற்றி வந்து குவியும் வாரம் இது. கவலைகள் குறைந்து மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். பெண்களுக்கு: உறவினர் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சக ஊழியர்களுடன் நட்புடன் பழகவும். பேச்சில் இனிமை தேவை. உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் வேலையை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.
கும்பம்:
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். சமுதாயத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். பெண்களுக்கு: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழச்சி நடத்த முயற்சி செய்வீர்கள். பெரியோரின் ஆசி கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகள் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். உங்கள் பொறுப்பில் உள்ள பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். சிலர் வேறு வேலை கிடைத்து செல்லக்கூடும்.
மீனம்:
நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்கும். உடல் நலம் மேம்படும். பண வரவு சீராக இருக்கும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு: கணவர் பாசமாக இருப்பார். அதனால் குதூகலமாக இருப்பீர்கள். உடல் நலம் பாதிக்கப்படலாம். விருந்தினர் வரவால் செல்வு அதிகரிக்கும். சேமிப்பு செலவாகும். வேலை பார்ப்போருக்கு: இந்த வாரம் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.
இந்த வாரம் இராசி நாயகர்களின் வரம் உங்களுக்கு எவ்வாறு உள்ளது?
Written By TamilDiscovery on Friday, July 12, 2013 | 8:42 AM
Related articles
Labels:
Astrology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !