உ.பியில் கல்லூரி மாணவி ஒருவரை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் தீவைத்து எரித்து விட்டது. அந்த பரிதாபத்துக்குரிய மாணவி தற்போது மருத்துவமனையில் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியை கற்பழித்த கும்பல் அவருக்குத் தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கின் சொந்த மாவட்டம்தான் எடவா என்பதால் இந்த விவகாரம் உ.பியில் பரபரப்பாகியுள்ளது. சம்பந்தபப்ட்ட பெண் தற்போது சபாயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சபாய்தான், முலாயமின் சொந்த ஊராகும். செவ்வாய்க்கிழமை மாலை இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
அந்தப் பெண்ணை, அவரது நண்பர் ஒருவர் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். இவரும் போயுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த மேலும் நான்கு பேருடன் சேர்ந்து அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்துக் கத்தியுள்ளார். போலீஸிடம் போவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதையடுத்து அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து விட்டனர்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்தப் பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Home »
India
» நன்பனின் வீட்டுக்கு சென்ற மாணவியைக் கற்பழித்து தீவைத்து எரித்த கொடூரம்! நன்பனின் கும்பல்!
நன்பனின் வீட்டுக்கு சென்ற மாணவியைக் கற்பழித்து தீவைத்து எரித்த கொடூரம்! நன்பனின் கும்பல்!
Written By TamilDiscovery on Friday, July 12, 2013 | 9:01 AM
Related articles
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
- அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !