இந்த நிலையில் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது...
‘தலைவா’ படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் இரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்’ ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல.
யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
இது போல் இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் தலைவா அரசியல் படம் அல்ல என்று அறிவித்து உள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல்.
சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் ‘ஐநாக்ஸ்’ என்ற பெயரில் 4 தியேட்டர்கள் உள்ளன. வணிக வளாகம் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளதால் இந்த காம்ப்ளக்ஸ் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஐநாக்ஸ் தியேட்டரில் வருகிற 9–ந் தேதி விஜய் நடித்துள்ள ‘தலைவா’ படம் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த தியேட்டருக்கு ஒரு கடிதம் வந்தது.அந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து மயிலாப்பூர் போலீசில் தியேட்டர் மானேஜர் விக்னேஷ் புகார் செய்தார்.
இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் சோதித்து பார்த்தனர்.
இது தவிர மகாராணி, அபிராமி, சத்யம், தேவி, மாயாஜால், பாரத், ஜி.வி.ஆர்., ஏ.ஜி.எஸ். ஆகிய தியேட்டர்களிலும் ‘தலைவா’ படம் திரையிடப்படுகிறது. இந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சில தியேட்டர்களுக்கு போன் மூலமும், சில தியேட்டர்களுக்கு காரில் வந்த சிலரும் மிரட்டல் விடுத்ததாக போலீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
‘தலைவா’ படத்துக்கு இன்று டிக்கெட் முன் பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வெடி குண்டு மிரட்டல் காரணமாக முன்பதிவு நடைபெற வில்லை. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். தலைவா விமர்சனம், தலைவா திரை விமர்சனம், thalaivaa thirai vimarsanam, thalaiva vimarsanam, தலைவா சிறப்பு விமர்சனம், தலைவா திரைவிமர்சனம்.
ஆளுங்கட்சி எதிர்ப்பு?
வருகிற 9ம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று உலகம் முழுக்க சுமார் 2000 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. வேந்தர் மூவிஸ் இப்படத்தை வெளியிட உள்ளனர். இந்நிலையில் தலைவா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.சென்னையில் தலைவா படத்திற்கு இன்று முன்பதிவு செய்ய முயன்ற ஐநாக்ஸ், சத்யம், மகாராணி, அபிராமி, தேவி, மாயாஜால், பாரத், ஏ.ஜி.எஸ்., பி.வி.ஆர். உள்ளிட்ட 9 திரையரங்குகளுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. தலைவா படத்தை உங்கள் திரையரங்குகளில் வெளியிட்டால் திரையரங்கில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டியவர்கள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை எனும் பெயரில் இந்த மிரட்டல்களை விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க தலைவா எனும் பெயர் இட்டநாள் முதலே பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்த இப்படம் இப்போது ஆளுங்கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு சில பல அரசியல் கட்சிகள் மிரட்டல் விடுத்து முன்பதிவாக டிக்கெட்டுகளை விநியோகிக்க வேண்டாம் என தடுத்து வருவதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட படஅதிபர்கள், இயக்குனரை அழைத்து பஞ்சாயத்து நடத்தி வருவதாகவும் தெரிகிறது. படத்தில் தமிழக அரசின் பெரும் சாதனையான இலவச அரிசி, மதிய உணவுத்திட்டம் உள்ளிட்டவைகளை ஒரு சில காட்சிகளில் கிண்டல் அடித்து இருப்பதாகவும், கேலி செய்திருப்பதாகவும் கேள்விப்பட்டு அரசியல் கட்சியினர் பிரச்னையை பெரிதாக்கி வருவதாக தெரிகிறது. இதன் வெளிப்பாடாக நாளை(ஆகஸ்ட் 8ம் தேதி) நடக்க இருந்த தலைவா படத்தின் பத்திரிக்கையாளர்கள் சிறப்பு காட்சியும் தள்ளிப்போக உள்ளதாக தகவல்.
இதற்கிடையே தமிழகம் முழுக்க தலைவா படத்தை திரையிடப்போவது இல்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்திருப்பதாகவும் கடைசிகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மை உறங்காது, உடனடியாக உலகுக்கு தெரியவரும் என நம்புவோம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !