அம்மு சினி ஆர்ட்ஸ் சார்பில் கோவை நேருஜி, பார்த்திபராஜன் இணைந்து தயாரிக்கும் படம் என்னைப் பிரியாதே.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை பொன். மணிகண்டன் இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் இணை இயக்குனராக இருந்தவர்.
இப்படத்தில் இரண்டு நாயகர்கள் நடிக்கிறார்கள். முதல் நாயகனாக ரத்தன் மௌலியும், இரண்டாவது நாயகனாக அமரும் நடிக்கிறார்கள். நாயகியாக ஷாமிலி நாயர், ரம்யா நரசிங்கர் நடிக்கிறார்கள். அதிரடி வில்லனாக அதிரவன் மிரட்டுகிறார். ஏ.எல்.எஸ்.வேலன் இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க கல்லூரி மற்றும் குடும்ப பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் பெரும்பகுதி பெரும்பாலும் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சுற்றி 45 நாட்கள் படமாக்கியுள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் பொன். மணிகண்டன் கூறும்போது:
சினிமா வலிமை மிக்க சாதனம். இதன்மூலம் நல்லது சொல்லி நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டது செய்து தீமை செய்யாமல் இருக்க வேண்டும்.
சமூகம் புகையாலும், மதுவாலும் சீர்கெட்டு கிடக்கிறது. இதை மேலும் நான் கெடுக்க விரும்பவில்லை. இந்த படத்தின் கதை நாகரீகமாகவும், கண்ணியமாகவும் இருக்கும் என்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !