சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கான புரோமோஷன் விழாவில் கூட்டத்தில் சிக்கிய ஷாரூக்கின் அழகிய மப்ளர் ஒன்று காணாமல் போனதாம்.
பொதுவாக காதலர்களுக்கு தங்கள் துணை பயன்படுத்தும் பொருட்களை அவர்களுக்குத் தெரியாமல் திருடி சென்று, அதைப் பார்த்து ரசிப்பது ஓர் இன்பமான அனுபவம். அதேபோல் ரசிகர்களுக்கும் பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள் என்றால் அலாதி பிரியம் தான். இதனால் தான், பல பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட்டு நிதி திரட்டிக் கொள்கிறார்கள்.
பணம் படைத்தவர்கள் ஏலம் மூலம் தனக்கு பிடித்தவர்களின் பொருட்களைப் பெறுகிறார்கள் என்றால், பணமில்லாத சிலர் பிரியமானவர்களின் பொருட்களை இரகசியமாக கவர்ந்து சென்று விடுகின்றனர்.
சமீபத்தில் இந்த அனுபவம் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கிற்கும் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக ஓடி, வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ். இதில் ஷாரூக் ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்திற்கான புரோமோஷன் வேலைகள் படு மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்காக இந்தியாவின் சில முக்கியப் பகுதிகளுக்கு விசிட் அடித்து வருகிறார்கள் ஷாரூக்கும், தீபிகாவும். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற புரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஷாரூக்கை ரசிகர்கள் படு உற்சாகமாக வரவேற்றனர்.
டாக்டர்களின் அறிவுரையை மீறி எப்போதுமே ரசிகர்களைக் கண்டால் ஆர்வ மிகுதியில் பாசத்தில் கட்டிப்பிடித்துக் கொள்வார் ஷாரூக். அந்தவகையில் மும்பையிலும் ரசிகர்களுடன் இரண்டறக் கலந்து போனார் ஷாரூக்.
சிறிது நேரத்திற்குப் பிறகு கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஷாரூக்கிற்கு பலத்த ஷாக். காரணம் அவர் கழுத்தில் இருந்த மப்ளரை காணவில்லை. ஏதோ ஒரு தீவிர ரசிகனின் வேலை தான் எனப் புரிந்து கொண்ட ஷாரூக், தனது மன வேதனையை இவ்வாறு ட்வீட்ட்ரில் பகிர்ந்து கொண்டுள்ளார், ‘அந்த கருப்பு நிற மப்ளர் சென்னை எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பின் போது அதன் இயக்குனர் ரோஹித் ரெட்டி எனக்கு அன்பளிப்பாக கொடுத்தது. மிகவும் பொக்கிஷமாக அதைப் பாதுகாத்து வந்தேன்.
மிகவும் ஆசையாக அதை அணிந்து வந்தேன். அதை எனது ரசிகர்களில் யாரோ தான் உருவிச் சென்றிருக்க வேண்டும்´ எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !