வெல்லிங்டன்: குண்டான பயணிகளின் வசதிக்காக எக்ஸ்.எல். வகுப்பை அறிமுகப்படுத்தப் போவதாக சமோவன் ஏர்லைன் நிறுவனம் அறிவித்துள்ளது. குண்டான மக்கள் அதிகம் இருக்கும் நாடு சமோவா. அங்குள்ள சமாவோ ஏர்லைன் நிறுவனம் பயணிகளின் உடல் எடையைப் பொறுத்து டிக்கெட்டுக்கு பணம் வசூல் செய்யும் முறையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. குண்டான பயணிகள் விமானத்தில் உள்ள இருக்கைகளில் அமர அவதிப்படுவதை பார்த்த நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
எக்ஸ்.எல். சீட் ஆடைகளில் எக்ஸ்.எல். அளவு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் குண்டான பயணிகள் வசதியாக பயணம் செய்ய எக்ஸ்.எல். சீட்களை அறிமுகப்படுத்துகிறது சமோவன் ஏர்லைன்.
அகலமான நடைபாதை உடல் பருமனுள்ளவர்கள் விமான நடைபாதையில் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. அதனால் நடைபாதையை அகலப்படுத்த சமோவன் ஏர்லைன் தீர்மானித்துள்ளது.
பிறர் கவனிப்பார்களா? சமோவன் ஏர்லைனைப் பார்த்து பிற விமான நிறுவனங்களும் எக்ஸ்.எல். சீட்டை அறிமுகப்படுத்துமா?
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !