இந்தியாவின் உத்தர்காண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 6,000 பேரையும் இறந்தவர்களாக அறிவிக்க அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.
உத்தர்கண்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் சிலர் காப்பாற்றப்பட்டனர். சிலரது உடல்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது. ஆனால், சுமார் 5500 முதல் 6000 பேரின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த நிலையில், சுமார் 18 மாநிலங்களில் இருந்து உத்தர்கண்டுக்கு வந்த போது காணாமல் போனவர்களின் பட்டியல் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் 5,700 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தெரிகிறது.
இவர்கள் அனைவரும் இறந்து போய்விட்டதாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !