இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் என்ற போர் விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உத்தர்லை விமானத் தளத்தில் வழக்கம் போல் குறித்த விமானம் இன்று பயிற்சியில் ஈடுப்பட்டது.
காலை 9.30 மணியளவில் இந்த போர் விமானம் தரையிறங்கியது. அப்போது ஓடுதளத்தில் இருந்து சறுக்கி சென்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் நொறுங்கியது. அதில் இருந்த விமானி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டு விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !