
விசாரணையில் கொலை செய்யப்பட்ட மாணவர் திருப்பூர் மாவட்டம் மண்ணரை பகுதியிலுள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகன் அசோக்குமார், 17, என தெரியவந்தது.
இவர் மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தன் நண்பர்கள் இருவருடன், ஒரு மாதத்துக்கு முன் சினிமா தியேட்டருக்குச் சென்றார்.
அப்போது அசோக்குமாரின் கையடக்க தொலைபேசி தொலைந்தது. இதை தன் நண்பரான பள்ளி மாணவன் எடுத்து விட்டான் என அசோக்குமார் சந்தேகித்துள்ளார்.
இந்நிலையில், அசோக்குமார், கடந்த, 12ம் திகதி காலை 7:30 மணிக்கு, திருப்பூர் வீட்டிலிருந்து கிளம்பி கோவை வந்துள்ளார். பின் தன் நண்பனுடன் மதுக்கரை, மைல்கல் பகுதிக்குச் சென்றார்.
அதன்பின் இருவரும், கையடக்க தொலைபேசி திருடியதாக சந்தேகிக்கப்படும் பள்ளி மாணவனையும் அழைத்துக்கொண்டு, கோலப்பொடி மலைக்கு சென்றுள்ளனர்.
மூவரும் பீர் குடித்துள்ளனர். அப்போது, அசோக்குமார், பள்ளி மாணவனை திட்டியுள்ளார். இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதை, மற்றொரு மாணவன் தடுத்தபோது, இருவரும் நிலை தடுமாறி, கீழே விழுந்தனர்.
இதில், அசோக்குமார் அங்குள்ள ஒரு கல்லின் மேல் விழுந்ததில் தலையில் காயமடைந்து மயக்கமடைந்தார். மற்ற இருவரும், அசோக்குமாரை பலமுறை கூப்பிட்டும் பலனில்லை. பயந்துபோன, இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு பின் மீண்டும் அங்கு வந்தவர்கள், அசோக்குமாரை அப்பகுதியிலுள்ள ஒரு குழிக்குள் தள்ளிவிட்டு, வீட்டுக்கு சென்று விட்டனர். அசோக்குமார் உயிரிழந்தார்.
மறுநாள் அங்கு வந்த இருவரும், அப்பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று அரை லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து ஊற்றி எரித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை சம்பவம் குறித்து இருவரும் தங்கள் வீட்டில் தெரிவித்துவிட்டு எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்று சரணடைந்தது தெரிய வந்தது.
பொலிசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பினர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !