Headlines News :
Home » » கொலிவுட்டில் ரஜினிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்: ஜில்லாவில் விஜய்க்கு சம்பளம் ரூ.16 கோடி!

கொலிவுட்டில் ரஜினிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்: ஜில்லாவில் விஜய்க்கு சம்பளம் ரூ.16 கோடி!

Written By TamilDiscovery on Wednesday, June 12, 2013 | 9:46 PM

கொலிவுட்டில் காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இளைய தளபதி விஜய்.

இதில் துப்பாக்கி திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனிடையே விஜய் நடிப்பில் தலைவா திரைப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்தப் படம் விஜய்யின் முந்தைய படமான துப்பாக்கி படத்தின் வசூலை முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு இப்போதே காணப்படுகிறது.

இப்படி தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் விஜய்யின் சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் ஜில்லா படத்திற்காக விஜய் சம்பளமாக ரூ.16 கோடியை பெற்றிருக்கிறார்.

இதன் மூலம் கொலிவுட்டில் ரஜினிகாந்தை அடுத்து அதிகம் சம்பளம் பெறும் நடிகர் பட்டியலில் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் ரஜினிக்கு எப்போதும் முதல் இடம் தான்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template