2–வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் கடந்த 16–ம் திகதி தொடங்கியது.
24–ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப்போட்டியில் பங்கேற்ற இந்திய தடகள வீரர்கள் வயது மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.
16 வயதுடைய வீரர்கள் மட்டுமே இந்தப்போட்டியில் பங்கேற்க முடியும்.
அதாவது 1.1.1997–ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் மட்டுமே ஆசிய இளைஞர் போட்டியில் கலந்து கொள்ளமுடியும். இந்திய தடகள அணியில் 27 பேர் பங்கேற்றனர். இதில் 18 பேர் அதிக வயதுடையவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. இந்த வயது மோசடி காரணமாக தடகள வீரர்கள் 18 பேரும் சீனாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தப்போட்டியில் பங்கேற்க சர்வதேச தடகள சங்கம் நிர்ணயித்த வயதின் படி தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. தாமதமாக விண்ணப்பித்தன் காரணமாக நேற்று முன்தினம் தான் இந்திய பேட்மின்டன் அணி வீரர்கள் ஆசிய இளைஞர் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது வயது மோசடியில் இந்த தடகள வீரர்கள் சிக்கியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !