அமெரிக்காவில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கும் இடையே மோதல் நீடிப்பதால் கடும் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சியின் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன் என ஜனாதிபதி ஒபாமா உறுதியாக கூறிவிட்டார். இதனால் அத்தியாவசியம் இல்லாத அரசு நிறுவனங்களான தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகம் உள்பட பல நிறுவனங்கள் 1-ம் திகதி மூடப்பட்டன.
சுமார் 10 இலட்சம் ஊழியர்கள் சம்பளம் இன்றி கட்டாய விடுப்பில் சென்றனர். 5-வது நாளாக தொடர்ந்து அரச நிறுவனங்கள் முடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஆளும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இரு தரப்பினருக்கும் இது வரையில் எந்த முடிவுக்கும் வரவில்லை. இப்பிரச்னையில் தீர்வு காணப்படுவதில் காலதாமதம் ஏற்படும் என்றே கூறப்படுகிறது.
எதிர்வரும் 17-ம் திகதி வரையில் தான் இதற்கு கெடு இருக்கிறது. அதற்குள் தீர்வு காணப்படவில்லை என்றால் அமெரிக்க அரசாங்கம் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதன் விளைவாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு விடும்.
இந்நிலையில் ஜனாதிபதி ஒபாமா வானொலியில் பேசியதாவது,
அரசாங்க நிறுவனம் மூடல் அறிவிப்பால் மக்களின் இதயத்தில் வேதனை குடிபுகுந்து விட்டது. இதனால் ஏராளமானோரின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு இருப்பதாக எனக்கு கடிதம் எழுதி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடிதம் எழுதியுள்ளார்கள். நெருக்கடியை தீர்க்க நான் யாருக்கும் பிணையத்தொகை கொடுக்க தயாராக இல்லை. இந்த நிதி பிரச்சினையால் நாடு கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலைமையை எதிர்க்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். எனவே தனித்தன்மையை பார்க்காமல், நாட்டு நலனை கருத்தில் கொண்டு நிதி மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
தற்போதைய நிதி நெருக்கடியால் நாசா பணிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு பணி புரிந்த 20 ஆயிரம் ஊழியர்களில் 95 சதவீதம் பேருக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டதால், நாசா பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.
இதன் விளைவாக விண்வெளி ஆய்வு மற்றும் விண்கலம் அனுப்பும் பணி பாதிக்கும். இதன் ஒருபகுதியாக செவ்வாய்க்கு இந்தியா விண்கலம் அனுப்ப இருக்கும் திட்டப்பணிகளும் பாதிக்கப்படுவதால் அதுவும் காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா!
Written By TamilDiscovery on Monday, October 7, 2013 | 12:15 AM
Related articles
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்!
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !