அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் வீரரான லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் தொடர்ந்து ஏழு முறை டூர் டி பிரான்ஸ் பட்டங்களை வென்றவர்.
அதுபோல்,கடந்த 2000மாவது ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் நடைபெற்ற சைக்கிள் போட்டி ஒன்றில் அவர் மூன்றாவது பரிசாக வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றார்.
ஆனால்,கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊக்கமருந்து பரிசோதனையில் இவரும்,இவரது குழுவினரும் பரவலாக ஊக்கமருந்தினைப் பயன்படுத்தியது நிரூபணம் ஆனது.
இதனால் இவர் போட்டிகளில் பங்கு கொள்வதற்குத் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸ் போட்டிகளில் இவர் பெற்ற பதக்கங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னால் அவரிடமிருந்த வெண்கலப் பதக்கத்தை திரும்ப அளிக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு கேட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமை அன்று அர்ஜெண்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்சில் நடைபெற்ற ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பச்,வெண்கலப் பதக்கத்தினை ஆர்ம்ஸ்ட்ராங் திரும்ப அளிக்காதது குறித்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் அன்று, தான் அந்த வெண்கலப் பதக்கத்தினை அமெரிக்க ஒலிம்பிக் அதிகாரிகளிடம் அளித்துவிட்டதாக லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தகவல், அமெரிக்க குழுவின் செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் சண்டுஸ்கியாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !