எதியோப்பியாவைச் சேர்ந்த விவசாயியொருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வயதானவர் எனவும் உரிமை கோரியுள்ளார்.
1895ஆம் ஆண்டு எதியோப்பியாவில் இத்தாலி தலையீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாபகம் உள்ளதாக ஓய்வுபெற்ற விவசாயி எடகபோ எப்பா தெரிவித்துள்ளார்.
எனினும் அவரிடம் தனது வயதை உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை.
அவர் ஒரோமியோ தொலைக்காட்ட்சிக்கு அளித்த பேட்டியின் போது 19ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற சம்பவங்களை விபரித்துள்ளார். இத்தாலியால் எதியோப்பியா ஆக்கிரமிக்கப்பட்டபோது, தான் இரு மனைவிகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
அவர் கூறுவது உண்மையானால் உலக வரலாற்றுப் பதிவில் நீண்ட காலம் வாழ்ந்த நபராக இடம் பிடிப்பார். இதுவரை உலக வரலாற்றில் அதிக காலம் உயிர் வாழ்ந்த நபராக பிரெஞ்ச்சுப் பெண்மணியான ஜீன் கல்மேந்த் உள்ளார். அவர் 1997ஆம் ஆண்டு அவரது 122ஆவது வயதில் மரணமானார்.
எழுதப்படிக்கத் தெரியாத சமூகத்தைச் சேர்ந்த எப்பவின் வயதை உறுதிப்படுத்தக்கூடிய எவருமே தற்ற்ப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது வயது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், உலகில் உயிர் வாழும் அதிக வயதானவராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிப்பார். தற்ப்போது உலகில் உயிர் வாழும் அதிக வயதானவராக 115 வயதான மிஸாவோ ஒகாவ விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !