கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் கட்டிடத்தொகுதி ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
புதியகடை இலக்கம் 3 நீதிமன்று வழங்கிய அனுமதியின்படி நேற்று (20) இரவு இவ் முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விபச்சார விடுதியை நடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர், இரு ஆண்கள் மற்றும் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் ஹெய்ன்துட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (21) புதியகடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !