பாக்தாத் நகரில் ரம்ஜான் விருந்தை சீர் குலைக்கும் வகையில், தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 34க்கும் அதிகமானோர் பலியாயினர். ஈராக்கில் ரம்ஜான் மாதம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர்.
ஜூலை 10ம் திகதி ரம்ஜான் தொடங்கி இன்று வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 230க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள காபி ஷாப்பில் நேற்று ஏராளமானோர் நோன்பு திறக்கும் விருந்தில் பங்கேற்றனர்.
அப்போது கார் வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். இதில் 34க்கும் அதிகமானோர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல் ஈராக்கின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கர்ரடா என்ற இடத்தில் ஷாப்பிங் மாலில் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தோப்சி என்ற மாவட்டத்தில் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள பையா என்ற இடத்தில் நேற்று நடந்த மற்றொரு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஜபார்னியா என்ற இடத்தில் நடந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாக்தாத்தில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 34க்கும் அதிகமானோர் பலி!
Written By TamilDiscovery on Sunday, July 21, 2013 | 3:55 AM
Related articles
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
- நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா!
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்!
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !