
கலிபோர்னியாவில் உள்ள வண்டன்பர்க் விமானப்படை தளத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான 'டெல்டா-4' நவீன உளவு செயற்கைகோளை நேற்று விண்ணில் ஏவியது.
'என்ரோல் - 65' என்னும் இந்த செயற்கைகோள் ஏவப்படும் செய்தி மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மதிப்பு வாய்ந்த சொத்தினை விண்ணில் செலுத்தியதை அமெரிக்காவின் கௌரவமாக கருதுவதாக இந்த உளவு செயற்கைகோளின் திட்ட அதிகாரி ஜிம் ஸ்பானிக் தெரிவித்தார்.
செயற்கைகோள் ஏவப்படும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது பேசிய வர்ணனையாளர், 'இந்த நாட்டின் விடுதலைக்காக தொண்டாற்றிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த செயற்கைகோள் ஏவலை அர்ப்பணிக்கிறோம்' என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !