உலகமெங்கும் உள்ள இளைஞர்களிடையே டேட்டிங் (Dating) கலாசாரத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவது தற்போது தெரியவந்துள்ளது.
இளைஞர்கள்
தங்களது நட்பு வட்டாரத்தை பெருக்கி கொள்ளவும், ஆண்களும் - பெண்களும் தங்களை
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், பீச்,
திரையரங்கம் மற்றும் பொழுதுபோக்கான இடங்களுக்கு செல்வதை வழக்கமாக்கி
கொண்டுள்ளனர்.
மேலை நாடுகளில் மட்டுமே இருந்து வந்த இந்த டேட்டிங் கலாசாரம், தற்போது உலகமெங்கும் பரவி கிடக்கிறது. இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வொன்றில், மூன்றில் ஒரு பங்கு
இளைஞர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
டேட்டிங்கில் ஈடுபட்ட 1058 அமெரிக்க இளைஞர்களிடம் கலிபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் நடத்திய சோதனையில் இது தெரியவந்துள்ளது. ஆய்வின் முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில்,
அமெரிக்காவில் 14 முதல் 20 வயதிற்குட்பட்ட ஆண்களும், பெண்களும்
டேட்டிங்கில் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் மூவரில் ஒருவர், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதாவது பெண்களில் 41 சதவிகிதமும், ஆண்களில் 37 சதவிகிதமும் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.
இது தவிர நட்பு ரீதியான டேட்டிங்கில், அதிகம் பேர் பாலியல் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு தன்னுடன் வந்தவர்களை துன்புறுத்துகின்றனர்.
அதற்கு உட்பட மறுப்பவர்களை உடலளிவில் தாக்குகின்றனர். இதன் காரணமாகவும் இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே டேட்டிங் செல்லும் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !