Headlines News :
Home » » வைகைப் புயல் வடிவேலு இப்போது எங்கே?

வைகைப் புயல் வடிவேலு இப்போது எங்கே?

Written By TamilDiscovery on Wednesday, September 11, 2013 | 9:48 AM

எம் மகன் படத்தில் விண்ணுக்கும், முனியாண்டி விலங்கியல் படத்தில் மண்ணுக்கும் தாவிய திருமுருகன் மீண்டும் படம் இயக்க வருகிறார். முதலிரு படங்களில் நடித்த அதே டீம்தான் புதிய படத்திலும் என்று தெரிவித்துள்ளார்.

திருமுருகனின் இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் பரத். அவருக்கு இணையான வேடம் வடிவேலுக்கு. எம் மகன் படத்தில் காமெடியும், குணச்சித்திரமும் கலந்த வேடத்தில் கலக்கியிருப்பார். திருமுருகனின் புதிய படத்தில் நடிப்பாரா வடிவேலு?

அரசியல் அக்கப்போரால்.

வனவாசத்தில் இருக்கும் வடிவேலு தனது ரிட்டர்ன் கிராண்டாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

சரித்திரப் படமொன்றில் ஹீரோவாக நடித்து வரும் அவர், காமெடி வேடத்தில் வருவதை திட்டமிட்டே தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. முதலில் ஹீரோவாக ரீஎன்ட்ரியாவோம். அப்புறம் காமெடி வேடங்களை பார்த்துக் கொள்ளலாம் என்பது அவரின் இன்றைய நிலைப்பாடு.

அதனால் திருமுருகனின் படத்தில் வடிவேலு நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template