கத்தோலிக மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் போலந்து நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான அக்னியெஸ்கா ரட்வன்ஸ்கா. உலகின் நான்காம் நிலை வீராங்கனையாக உள்ள இவர், சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் அரை இறுதியில் தோற்றுப் போனார்.
இவர் 'பொடி இஷ்யு' என்ற பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். டென்னிஸ் பந்துகள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு நீச்சல் குளத்தின் புல்வெளியில் உள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி அந்தப் பத்திரிகையின் அட்டைப் படத்தில் வந்துள்ளது. ஜீசஸ் குறித்து நான் வெட்கப்படுவதில்லை என்ற பிரசாரத்தினை நடத்தும் இளைஞர் சிலுவைப் போர் என்ற கத்தோலிக்க இளைஞர் பிரிவினர், இவரது இந்த தோற்றம் கண்டு அதிர்ந்தனர். பத்து லட்சத்திற்கும் மேலான தொண்டர்களை கொண்ட இந்த இயக்கம், ரட்வன்ஸ்காவை அவரது தவறான நடவடிக்கைக்காக தங்களுடைய இயக்கத்திலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்னால், இந்தப் பிரிவினரால் நடத்தப்பட்ட தொலைக்காட்சி வர்த்தக விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ரட்வன்ஸ்கா கையில் டென்னிஸ் பந்துகளுடன் தோன்றி ஜீசஸ் என்று கூறி தங்களது நம்பிக்கை குறித்து வெட்கப்படத் தேவையில்லை என்று மத பிரச்சாரம் செய்தார்.
ரட்வன்ஸ்கா தவிர, போர்ட்டோரிக்கோவின் மோட்டார் பந்தய வீரரான தாரா கிலெகரும், ஒன்பது முறை கோல்ப் பந்தயத்தில் சாம்பியன் பெற்ற 77 வயது நிரம்பிய கேரி பிளேயரும் இந்த பத்திரிகையில் பேட்டி அளித்திருந்தனர். போப் இரண்டாவது ஜான்பாலின் பிறப்பிடமான போலந்து நாடு, தீவிர பக்தி நெறியைப் பின்பற்றும் நாடாகும். இங்குள்ளவர்களில் 90 சதவிகிதத்தினர் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !