நேற்று தனது இணையதளத்தில் இந்நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக, 21 மைல் நீளம் கொண்ட இங்கிலீஷ் கால்வாயை கடக்கபோவதாகத் தெரிவித்திருந்தார். கப்பல் போக்குவரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பகுதி இதுவாகும். இந்த
நிகழ்ச்சிக்காக அவர் 3,000 பவுண்ட் திரட்டியிருந்தார்.
இங்கிலீஷ் கால்வாயின் நீச்சல் அமைப்பு எப்போதாவதுதான் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கும். சூசன் டைலரும் இந்த
அமைப்பின் மேற்பார்வையுடன்தான் தனது நீச்சல் முயற்சியைத் துவக்கினார். ஆனால், பிரான்ஸ் எல்லைக்கருகில் நீந்தும்போது அவர்
மயங்கியதால் அருகில் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படகில் ஏற்றப்பட்டு, பின்னர் விமானம் மூலம் அருகே இருந்த போலான் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பலனளிக்காமல் சூசன் இறந்துவிட்டார்.
சூசனின் மரணத்தை அறிவித்த அவரின் சகோதரி அவரது நண்பர்களையும், நலம் விரும்பிகளையும் இந்தத் தொண்டு நிறுவனத்திற்காக
நிதி அளிக்கும்படி வேண்டிக் கொண்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற அயர்லாந்துப் பெண்ணான பரெய்க் கேசி (45) யும் இதுபோல் மரணமடைந்தார்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !