Headlines News :
Home » » வளர்ப்புப் பூனை இறந்த துக்கத்தில் 25 வயதுப்பெண் தீக்குளித்து தற்கொலை

வளர்ப்புப் பூனை இறந்த துக்கத்தில் 25 வயதுப்பெண் தீக்குளித்து தற்கொலை

Written By TamilDiscovery on Monday, July 15, 2013 | 11:23 AM

வளர்ப்புப் பூனை இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் அம்பர்பேட் பகுதியை சேர்ந்தவர் சுவர்ணலதா (25). மிகவும் பிரியமாக ஓர் பூனையை அவர் வளர்த்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பூனை 2 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டது.

'உயிருக்கு உயிராக செல்லமாக வளர்த்த பூனையை காப்பாற்ற முடியவில்லையே' என்று வேதனைப்பட்ட சுவர்ணலதா கடந்த 2 நாட்களாக உணவு, உறக்கமின்றி துக்கத்தில் மூழ்கிப் போனார். உச்சக்கட்ட துக்கத்தில் இருந்த அவர், வீட்டில் யாருமில்லாத போது மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டு உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

பூனை இறந்த பிரிவை தாங்க முடியாததால் தற்கொலை செய்துக்கொள்வதாக அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template