தன் கையடக்க தொலைபேசிக்கு வந்த மிஸ்கேல் எண்ணைத் தொடர்பு கொண்டு இளம் பெண் ஒரு நபருடன் பேசி உறவை வளர்த்துள்ளார். இதனால் அந்தப் பெண் தனது கற்பை இழக்க நேரிட்ட சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று காலை ஒரு இளம்பெண் அனாதையாக சுற்றிக் கொண்டிருந்தார். ரோந்து பொலிசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தனது ஊர் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் என்று கூறினார். பொலிசார் ஆற்றிங்கல் பெலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு அந்த பெண் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.
அங்குள்ள பொலிசார் இதுபற்றி விசாரித்தபோது, அந்த பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்த விவரத்தை தெரிவித்ததோடு அந்த பெண்ணை ஆற்றிங்கல் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த பெண் கூறியதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கையடக்க தொலைபேசிக்கு ஒரு மிஸ்கோல் வந்தது. அதை தொடர்பு கொண்டு பேசியபோது, திருவனந்தபுரம் பீமாபள்ளி பகுதியைச் சேர்ந்த ஷானு (வயது 20) என்பவர் பேசினார். அவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தேன்.
அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி 2 நாட்களுக்கு முன்பு அவரோடு சென்றேன். ஒரு காரில் என்னை அழைத்துச்சென்ற ஷானு திருவனந்தபுரத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றி திரிந்தார். பின்னர் நாங்கள் கோவளம் கடற்கரைக்கு வந்து தங்கினோம். அங்கு ஷானு என்னுடன் உல்லாசமாக இருந்தார். அதன் பிறகு செலவுக்கு பணம் இல்லை என்று கூறி எனது 4 பவுன் செயினையும் வாங்கிக் கொண்டார். அதை பணமாக்கி வருவதாக கூறி சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை.
அவரை தேடி அலைந்த போது, என்னை ஏமாற்றிச் சென்றது தெரிய வந்தது.
இவ்வாறு பொலிசாரிடம் தெரிவித்தார்.
பொலிசார் அந்த பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு வந்த நம்பரை கொண்டு ஷானுவின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். நேற்று ஷானு கைது செய்யப்பட்டார். அவரை ஆற்றிங்கல் நீதிமன்றிடில் ஆஜர்ப்படுத்திய பொலிசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !