Headlines News :
Home » » காதலனால் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி துஸ்பிரயோகம்!

காதலனால் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி துஸ்பிரயோகம்!

Written By TamilDiscovery on Wednesday, July 31, 2013 | 7:05 AM

12 வயது சிறுமி ஒருவரை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாரவில பொலிசார் தெரிவித்தனர். கொஸ்வத்தை மீகஹவெல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளவராவார்.

கடந்த 8ஆம் திகதி குறித்த சிறுமி தனது சகோதரி மற்றும் தாயுடன் மாரவில வைத்தியசாலைக்குச் சென்றிருந்த வேளை வைத்தியசாலை உணவகத்திற்குச் செல்வதாகக் கூறி வெளியேறியுள்ள அச்சிறுமி மீண்டும் திரும்பி வரவில்லை எனவும், இது தொடர்பில் விசாரித்ததில் தனது மகள் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்த இளைஞனுடன் சென்றிருப்பதாக அறிந்து கொண்டதாக சிறுமியின் தாய் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினமே முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமி ஞாயிற்றுக் கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். தான் மீகஹவெல பிரதேசத்தில் அமைந்துள்ள தும்பு ஆலையில் பணியாற்றும் இளைஞர் ஒருவருடன் சென்றதாகவும், தாம் இருவரும் பொலன்னறுவை மானம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் தங்கி கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் தாயிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் தனது மகள் கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள விடயத்தினை மாரவில பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதுடன் அம்முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான இளைஞன் மாரவில பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவம் பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதால் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு சந்தேக நபரை பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாரவில பொலிசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template