ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் டாட்டா வனவிலங்கு காப்பகம் உள்ளது. தற்போது அப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் விஷத்தன்மை வாய்ந்த கருநாகம் ஒன்று மெல்ல ஊர்ந்து சிங்கத்தின் கூண்டுக்குள் புகுந்துக் கொண்டது.
இதை பார்த்த ஆண் சிங்கம் சீறிப் பாய்ந்து கருநாகத்தின் கழுத்தில் காலால் மிதித்துக் கொண்டது. பெண் சிங்கம் அதன் வாலை கடித்து இழுத்து 2 துண்டுகளாக்கி கீழே போட்டது.
உயிருக்கு போராடிய கருநாகம் சிங்கங்களை ஆக்ரோஷத்துடன் கொத்தியதால் ஜம்போ என்ற அந்த ஆண் சிங்கமும், சலியா என்ற பெண் சிங்கமும் மயங்கி விழுந்தன.
வன விலங்கு காப்பக ஊழியர்கள் உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் அளித்ததால் விஷமுறிவு ஊசி போடப்பட்டு தற்போது சிங்கங்கள் தேறி வருகின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !