Headlines News :
Home » » நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் சற்று முன்பு காலமானார்!

நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் சற்று முன்பு காலமானார்!

Written By TamilDiscovery on Saturday, June 15, 2013 | 1:10 AM

சென்னை: இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.

சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். மணிவண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் இவரது சொந்த ஊர் ஆகும். பாரதிராஜாவிடம் 1979-ல் உதவி இயக்குனராக சேர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓய்வதில்லை படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை 1982-ல் முதன்முதலாக டைரக்டு செய்தார். கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா. பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தொடர்ந்து பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த மணிவண்ணன், கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50வது படம். vetern film director actor manivannan passed away ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். நிழல்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். காமெடி மற்றும் குணசித்திர வேடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். வில்லன், துள்ளாத மனமும் துள்ளும், குருவி, தம்பி, எங்கள் அண்ணா, பம்மல் கே.சம்பந்தம், மாயி, படையப்பா, கொடி பறக்குது, தாய்மாமன் உள்பட கிட்டத்தட்ட 600 படங்கள் வரை அவர் நடித்துள்ளார். இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல ஹிட் படங்களை டைரக்டு செய்துள்ளார்.

கடைசியாக சத்யராஜை வைத்து அமைதிபடை 2-ம் பாகத்தை 'நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.

இந்தப் படத்துக்குப் பிறகு 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளம், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template