கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்கா சார்பில் டேவிட் மில்லர் 85 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 3, திசர பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு 224 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறி வந்தது. எனினும் மத்திய வரிசையில் களம் புகுந்த திசர பெரேரா அதிரடி ஆட்டத்தை வௌிப்படுத்தியதால் இலங்கையின் பக்கம் வெற்றிவாய்ப்பு திரும்பியது. ஆனால் திசர பெரேராவை ஆட்டமிழக்கச் செய்து தென்னாபிரிக்கா இலங்கை இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இறுதியில் இலங்கை அணி 43.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் திசர பெரேரா அதிரடியாக ஆடி 65 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் ட்சொட்சொபே 4 விக்கெட்களையும் பெஹர்தீன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !