இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஷீலா தீட்சித், ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த பாடல் ஒன்றை பாடி, நடனமாடி விழாவில் பங்கேற்றவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
கிழக்கு டெல்லியில் உள்ள யமுனா விளையாட்டு அரங்கில், அங்கீகாரமற்ற காலனிகளுக்கு பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஷீலா தீட்சித் ஏஆர் ரகுமான் பாட்டுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியின் போது மேடையில் பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்க ராகுல் காந்தி வர சற்று தாமதமானது.
அப்போது ஏ.ஆர்.ரகுமான் இசை ஆல்பத்தில் வெளியான ‘மே துஜே சலாம்‘ என்ற பாட்டை, முதல்வர் ஷீலா தீட்சித் பாடினார்.
இதையடுத்து இசைக்கேற்ப நடனமாடியும் மக்களை வியப்பில் ஆழ்த்தினார். முதல்வருடன் சேர்ந்து மேடையில் இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் நடனமாடினர்.
இந்நிலையில் மேடைக்கு வந்த ராகுலை அவர் வரவேற்றார். கடந்த 50 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற 45 காலனிகளில் வசிப்பவர்களுக்கு இதன்போது ராகுல் பட்டா வழங்கினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !