டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து டெல்லி சாகேத் விரைவு நீதிமன்றம் இன்று (13.09.2013) உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
தெற்கு டெல்லியில் உள்ள சாகேத் விரைவு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி 3 முதல் செப்டம்பர் 10ம் திகதி வரை விசாரிக்கப்பட்டது.
இதில் ஒரு குற்றவாளி ஏற்கனவே சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனுக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, "குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் தாகுர், பவன் குப்தா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, நால்வரும் குற்றவாளிகள்´ என்று செவ்வாய்க்கிழமை நீதிபதி யோகேஷ் கன்னா, தீர்ப்பளித்தார்.
அவர்களின் தண்டனை விவரம் புதன்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, விரைவு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நால்வரும் புதன்கிழமை காலை 11 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். தண்டனை அறிவிக்கும் முன்பு, தீர்ப்பு தொடர்பான வாதங்களை முன்வைக்க பொலிஸ் தரப்புக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்களுக்கும் நீதிபதி யோகேஷ் கன்னா அனுமதியளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் நீதிபதி யோகேஷ் கன்னா நிராகரித்தார். மேலும், "குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து சாகேத் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !