கனடா வாழ் இந்தியர் மன்மீட்சிங். இவரது மனைவி ரவீந்தர் கவுர் பாகு (23). இவர்கள் இருவரும் இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது காதலித்து கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் தங்கியிருந்தனர். ரவீந்தர்கவுர் பாகு அங்குள்ள ஒரு பஞ்சாபி பத்திரிகையில் பணிபுரிந்தார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே பாகு கணவரை விட்டு பிரிந்து தனது தோழி வீட்டில் தங்கியிருந்தார். விவகாரத்துக்கும் மனு செய்திருந்தார்.
தன்னுடன் சேர்ந்து வாழ மன்மீட்சிங் அழைத்தும் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மன்மீட்சிங் பாகு பணிபுரிந்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்று அவரிடம் தகராறு செய்தார். பின்னர் ஊழியர்கள் முன்னிலையில் அவரை 30 தடவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இந்த வழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மிரியம் மெசான்வில்லே குற்றம் சாட்டப்பட்ட மன்மீட் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 16 ஆண்டுகள் அவரை பரோலில் செல்ல அனுமதிக்ககூடாது என்றும் உத்தரவிட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !