ரொறொன்ரோ, மிசிசாகாவில் Emma Gilfillan-Giannakos என்பவரின் வீட்டு பின் தோட்டத்தில் பிள்ளைகள் விளையாடி கொண்டிருக்கையில் அவரும் இருந்திருக்கின்றார். திடீரென வெடிகுண்டு சத்தத்துடன் ஏதோ ஒன்று அவர்களது நீச்சல் தடாகத்தில் மோதியுள்ளது. வீட்டு பின்திண்ணை, நீச்சல் தடாகம், தோட்டம் எல்லாம் பிரவுண் நிறத்தில் ஏதோ ஒன்று விசிறி அடித்திருந்ததைக் கண்டார். என்னவென அறியாத நிலையில் தனது விரலால் தொட்டுபார்த்த போது அது மலம் போல் மணந்ததாக கூறியுள்ளார்.
அவரது வீடு பியர்சன் சர்வதேச விமான நிலைய விமான பாதையில் உள்ளது. அவரது வீட்டிற்கு மேலாக தினமும் விமானம் போவதை பார்க்க கூடியதாக இருக்கும்.
கனடா போக்குவரத்து அதிகாரிகள் இதுபற்றி புலன்விசாரனை நடாத்தி வருகின்றார்கள் ஆனால் இறுதியான முடிவு தெரியவரவில்லை.’blue ice’ எனப்படும் ஒன்றாக இருக்கலாம் என கூறுகின்றார்கள். இப்பொருள் அடிக்கடி விமானத்திலிருந்து விழுவதுண்டு எனவும் கூறியுள்ளார்கள்.
விமானத்தின் மலசலகூட கழிவுகள் சேமித்து வைக்கப்படும் தொட்டியில் ஏற்படும் கசிவினால் ‘blue ice’ உருவாகுவதாகவும் அது உறைந்து விமானத்தில் ஒட்டிக்கொள்கின்றது. விமானம் புறப்படும் போது ஏற்படும் வெப்பத்தினால் விமானத்திலுருந்து விழும்.
இப்படித்தான் நடந்திருக்குமானால் தாங்கள் அந்த விமானத்தை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக புலனாய்வாளர்கள் Emma Gilfillan-Giannakos இடம் கூறியுள்ளனர்.நீண்ட விசாரனை வரை தன்னால் காத்திருக்க முடியாதென அவர் கூறியுள்ளார்.
வீட்டின் பின்திண்ணையை சுத்தம் செய்து மாற்றுவதற்கும், தடாகத்தை சுத்தப்படுத்தவும் $5,000 செலவாகியதென அவர் கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !