எனது தந்தை தினமும் மது அருந்திவிட்டு வந்து எனது தாய்க்கு அடித்து சண்டை பிடிப்பார். இதனால் தான் நான் ரகுமான் என்பவரிடம் என்னை அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறினேன். அங்கு 02 நாட்கள் நாங்கள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தோம். மாணவி சாட்சியம்.
• அந்த பிள்ளையை விசாரித்த போது எனக்கு யாருமில்லை நான் அநாதை ஆச்சிரமத்திற்கு செல்லப்போகிறேன் என்றது. அதற்கு நான் என்னை திருமணம் முடிக்க விருப்பமா? என்று கேட்டேன். சரி என்றார் . குற்றம்சாட்டப்பட்ட ரகுமான் சாட்சியம்.
• எனக்கு 04 பிள்ளைகள் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். எனது பிள்ளைகளை பார்ப்பதற்கு யாருமில்லை அதனால் எனது கணவரை காப்பாற்றி விடு . எனக்கு ஒரு தம்பி உள்ளான் அவனை திருமணம் முடித்து தருகிறேன் . ரகுமானின் மனைவி சாட்சியம்.
• பிள்ளை பாடசாலைக்கு சென்றிருந்தால் இப் பிரச்சினை வந்திருக்காது. எனவே இவ்வாறான பிரச்சினைகள் வருவதற்கு குடும்பப் பிரச்சினையே அடிப்படைக் காரணமாகும். சிறுவர் நன்னடத்தை அதிகாரி சாட்சியம்
சம்மாந்துறையைச் சேர்ந்த செல்லத்துரை உம்மு பஸீனா என்ற 8ம் வகுப்பு 13 வயது மாணவியை அதே ஊரைச்சேர்ந்த எஸ். ரகுமான் என்பவர் திருமணம் முடிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இச்சம்பவம் 2013.05.20ம் திகதி சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு அச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய பணிமனையின் ஏற்பாட்டில் காரைதீவு மனித அபிவிருத்தித்தாபன அனுசரணையில் இது தொடர்பான விசாரணை சம்மாந்துறை சிறுவர் நன்னடத்தை காரியாலயத்தில் சிரேஸ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் ஏ. உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்றது.
சம்மாந்துறை சென்னல் சாகிறா வித்தியாலயத்தில் 8ம் தரத்தில் கல்வி கற்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் செல்லத்துரை உம்மு பஸீனா ஆகும்.இவர் 153. 3 சென்னல் கிராமம் – 02,சம்மாந்துறையை;சேர்ந்தவராவார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அதே ஊரைச்சேர்ந்த 40.35 சென்னல் கிராமத்தில் வசிக்கும் 29 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எஸ். ரகுமான் என்ற சாரதி ஆவார்.
சம்பவம் தொடர்பான கலந்துரையாடலில் தெரியவந்த விபரங்கள் வருமாறு ;
சம்மாந்துறை சிறுவர் நன்னடத்தை அலகு உத்தியோகத்தர் ஏ. உதுமாலெவ்வை; விடயம் சம்மந்தமாக விளக்குகையில் இன்றைய சம்பவ கலந்துரையாடலானது இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மூலமாக எமக்கு கிடைக்கப்பெற்ற சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு நடாத்தப்படுகின்றது என கூறினார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் சம்பவம் தொடர்பான விளக்கத்தினை கூறுமாறு வேண்டினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை செல்லத்துரை விபரிக்கையில் :-
நான் மீன்பிடி தொழில் செய்பவன.; எனக்கு 07 பிள்ளைகள் அதில் மூத்த பிள்ளை திருமணம் முடித்து விட்டார். இரண்டாவது பிள்ளை யமாத் சென்று விட்டார். மற்றைய பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். 2013.05.20ம் திகதி சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலுக்கு சென்று மாலை 6.00 மணியளவில் வீட்டிற்குச் சென்றேன். அப்போது எனது மனைவி மகள் பஸீனாவை காணவில்லை என்றார். நான் உடன் அவளை தேடி எல்லா இடங்களிலும் பார்த்தேன். அதுவரைக்கும் மகள் வீட்டிற்கு வரவில்லை என கூறினார். அதன் பின்னர் நாங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனால் அவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் வரக்கூடாது எனவும் கூறினார்.
பொலிஸ் சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.ரங்கநாயகி விபரிக்கையில் :-
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நபிலா 2013.05.21ம் திகதி அன்று பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது பிள்ளையை காணவில்லை என்று முறைப்பாடு செய்திருந்தார். அதன் பின் நாங்கள் இப்பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்தல் விடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் அம்பாறை பொலிஸார் இருவரையும் கண்டு பிடித்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு இரவு 10.30 மணிக்கு (2013.05.23ம் திகதி) அனுப்பி வைத்திருந்தார்கள். உடன் சந்தேக நபரை கைது செய்தோம். பின்னர் சிறுமியை அம்பாறை வைத்தியசாலையில் அனுமதித்தோம்.
வைத்தியசாலைக்கு சென்று சிறுமியை விசாரித்த போது சிறுமி தனது தாய் சுகயீனம் காரணமாக இருப்பதால் வீட்டு வேலை தானே செய்வதாகவும் வீட்டில் கிணறு இல்லை என்றும் தண்ணீர் எடுப்பதற்கு பக்கத்து வீட்டிற்குச் சென்று தான் தண்ணீர் எடுப்பது என்றும் கூறினார். எனது தந்தை தினமும் மது அருந்திவிட்டு வந்து எனது தாய்க்கு அடித்து சண்டை பிடிப்பார். இதனால் தான் நான் ரகுமான் என்பவரிடம் என்னை அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறினேன். அவர் என்னை அவரது நண்பன் இர்சாட் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு 02 நாட்கள் நாங்கள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தோம். பின்பு காவின் எழுதுவதற்காக பதிவாளரிடம் சென்றோம். அங்கு அவர் உங்களுக்கு வயது போதாது நீங்கள் ஒரு கடிதம் கொண்டு வாருங்கள் என்றும் கூறினார்.
அதன் பின்பு கடிதம் எடுப்பதற்காக அம்பாறை பொலிஸ் சென்றோம். அவர்கள் எங்கள் இருவரையும் கைது செய்து சம்மாந்துறை பொலிசாரிடம் அனுப்பினார்கள். அவர்கள் என்னை உடனே வைத்தியசாலையில் அனுமதித்தார்கள் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பஸீனா கூறினார்.
ரகுமானை விசாரனை செய்த போது:
ரகுமான் சம்பவம் தொடர்பாக வாய்மூல அறிக்கை தருகையில். நான் கொச்சிக்காத்தூள் மில்லடியில் சென்றபோது அங்கு இந்தப் பிள்ளை கையில் பையுடன் நின்று கொண்டிருந்தது. அந்த பிள்ளையை விசாரித்த போது எனக்கு யாருமில்லை நான் அநாதை ஆச்சிரமத்திற்கு செல்லப்போகிறேன் என்றது. அதற்கு நான் என்னை திருமணம் முடிக்க விருப்பமா? என்று கேட்டேன். சரி என்றதும் எனது நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அதன் பின்னர் பதிவு திருமணம் செய்வதற்கு முயற்சி செய்த போது அம்பாறை பொலிசார் எங்களை பிடித்தார்கள் வேறு ஒன்றும் நடைபெறவில்லை என்றார். என ரகுமானின் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது என்றார் பொலிஸ் அதிகாரி.
மேலும் கூறுகையில் குடும்பத்தில் பெற்றோர் தனது பிள்ளைகளை கண்காணித்துக் கொள்வதுடன் அவர்களோடு அன்பாகவும் பழக வேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால் தான் இவ்வாறான பிரச்சினைகள் நடைபெறாது தவிர்த்துக்கொள்ள முடியும் என விளக்கினார்.
சென்னல் சாகிறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.மீராமுகைடீன் கருத்து தெரிவிக்கையில் :-
எமது பாடசாலையில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்றவர். இவர் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை 2013ம் ஆண்டில் ஜனவரியில் 08 நாட்களும் பெப்ரவரியில் 02 நாட்களும் மொத்தமாக 10 நாட்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார். இதன் காரணமாக நான் எமது பாடசாலையிலுள்ள ஆசிரியர் ஒருவரை அவர் வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் (மார்ச் ஏப்ரல்) அனுப்பியிருந்தேன்.
அதற்கு பஸீனாவின் பெற்றோர் பஸீனா நாளை வருவார். நாளை வருவார் என்று ஒவ்வொரு தடவையும் கூறுவார்கள். அதன் பின்னர் சென்று விசாரனை செய்த போது பஸீனாவை மத்தரசாவுக்கு அனுப்ப போகின்றோம் என்றார்கள். பாடசாலைக்கு 40 நாட்கள் தொடர்ச்சியாக சமூகமளிக்காத பிள்ளைகளை நாங்கள் இடைவிலகிய மாணவர்களாகத்தான் கருதுவோம். அதன் பின் ஒரு நாள் பஸீனாவின் தந்தை என்னிடம் வந்து எனது பிள்ளையை மதரசாவுக்கு அனுப்பவுள்ளேன். அதனால் பிள்ளையின் பிறப்புச்சான்றிதழை தருமாறு கேட்டார். நாங்கள் அதனைக் கொடுத்து விட்டோம் என்றும் கூறினார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மேற்பார்வை பிராந்திய இணைப்பாளர் இஸ்சடின் லத்திப் விபரிக்கையில் :-
பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை எமது காரியாலயத்துக்கு வந்து முறைப்பாடு தந்திருந்தார். அதனை விசாரித்ததன் பின்பு இம் முறைப்பாட்டினை சிறுவர் நன்னடத்தை காரியாலயத்துக்கு அனுப்பி வைத்திருந்தோம். அதன் பின்பு என்னிடம் ஒருவர் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு 02 பேர் காவின் எழுதுவதாக வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு வயது போதாததால் அவர்களிடம் 25000 ஸ்ரீ பணமும் ஒரு கடிதமும் எடுத்து வரும்படியும் கூறியிருக்கின்றேன் என்று பதிவாளர் என கூறி அறிவித்தல் தந்திருந்தார். இது நேற்று இன்று நடந்த சம்பவம் இல்லை இது நீண்ட காலமாக நடந்து கொண்டு வந்திருக்கின்றது. பெற்றோர்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளில் அவதானமாக இருக்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக ரகுமானின் மனைவி பஸீனா பிள்ளையிடம் கூறியுள்ளார் எனக்கு 04 பிள்ளைகள் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். எனது பிள்ளைகளை பார்ப்பதற்கு யாருமில்லை அதனால் எனது கணவரை காப்பாற்றி விடு . எனக்கு ஒரு தம்பி உள்ளான் அவனை திருமணம் முடித்து தருகிறேன் என வாதாடியுள்ளார். பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு பாடசாலையில் ஒர் ஆசிரியர் மூலம் கௌன்சலின் ஆலோசனை வழிகாட்டல் கொடுக்கப்பட்டிருந்தால் இப்பிரச்சினை வந்திருக்க மாட்டாது. ஆனால் குறிப்பிட்ட ஆசிரியர் இதில் சரியான கவனம் எடுக்க வில்லை என்றார்.
கிராம சேவை உத்தியோகஸ்தரின் எம்.ஐ.எம்.நளீர் கருத்துரைக்கையில்
இச் சம்பவத்தினை அறிந்து ரகுமானின் வீட்டிற்குச் சென்றபோது ரகுமானின் மனைவி தனது நான்கு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு மிகவும் கஸ்ரப்பட்டுக்கொண்டு இருந்தால். என்ன நடந்தது என கேட்டபோது தனது கணவர் வளத்தாப்பிட்டியில் ஒரு கடையில் நின்று கொண்டிருந்ததாகவும் அங்கு தான் ஆட்டோவில் சென்று கணவரை இறுக்க கட்டிப்பிடித்து வாருங்கள் வீட்டிற்கு செல்வோம் என்று அழைத்த போது அவர் என்னை தள்ளி விட்டு ஆட்டோவில் ஏறிச் சென்று விட்டார். என்று ரகுமானின் மனைவி கூறினார். இச்சம்பவம் எனக்கு முதலில் தெரிந்து இருந்தால் நான் இப்படி நடக்க விடாமல் தடுத்து நிறுத்தி இருந்திருப்பேன் என்று சில ஆறுதலான வார்த்தையை கூறிவிட்டு வந்து விட்டேன் என கிராம உத்தியோகத்தர் கூறினார்.
சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஏ. உதுமாலெவ்வை கூறுகையில் :-
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுவதாலும் அல்லது கணவன்; மனைவி நடந்து கொள்ளும் விதத்தினால் ஏற்படும் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுவது பிள்ளைகளே தான். என்றும் முதலில் பிள்ளையை காணவில்லை என்றால் பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும். செய்ததா? என பிள்ளையின் தந்தையிடம் கேட்டபோது ஆம் எனக் கூறினார். பிள்ளைகள் பாடசாலைக்கு ஒழுங்காக செல்லவில்லை என்றால் என்ன காரணமாக இருக்கும் என்று பெற்றோர் அறிந்திருக்க வேண்டும்.
ரகுமான் என்பவனுக்கும் பஸீனாவுக்கும் தொடர்புகள் இருந்தது தெரியுமா என்றும் மது அருந்தும் பழக்கம் உண்டா எனவும் பஸீனாவின் தந்தையிடம் கேட்டதற்கு அவர் நான் மது குடிப்பதை நிறுத்தி 08 மாதமாகிறது என்றும் பீடி மாத்திரம் தான் குடிப்பது என்றும் கூறினார்.
எது எப்படி இருந்தாலும் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பாமல் இருந்தது பிழைதான் பிள்ளை பாடசாலைக்கு சென்றிருந்தால் இப் பிரச்சினை வந்திருக்காது. எனவே இவ்வாறான பிரச்சினைகள் வருவதற்கு குடும்பப் பிரச்சினையே அடிப்படைக் காரணமாகும். என்றும் பெற்றோhகள் பிரச்சினைகள் வராமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரச்சினைகள் வரமுன் காக்கும் வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
சபையின் இறுதிக் கருத்துக்கள்:
இன்று சரியான முடிவினை பெற முடியாது என்றும் (து.ஆ.ழு) வின் வைத்திய அறிக்கை வந்த பின்பு தான் சரியான முடிவினை பெற முடியும். அறிக்கை வந்தவுடன் அடுத்த கலந்துரையாடலை நடத்துவதாகவும் அதில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சமூக சேவை உத்தியோகத்தர்கள் வைத்திய அதிகாரி அரச உத்தியோகத்தர்கள் எல்லோரையும் அழைத்து பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம் என்று கூறி இறுதியாக பாதிக்கப்பட்ட பிள்ளையின் வீட்டிற்கும் ரகுமானின் விட்டிற்கும் சென்று நிலமையை அறிந்து கொள்வோம் என்று கூறி இன்றைய கலந்துரையாடலை முடித்துக் கொண்டார்கள்.
ரகுமானின் வீட்டிற்கு சென்று மனைவி நபிலாவை விசாரித்த போது
தான் 1982 ஆம் ஆண்டு பிறந்ததாகவும் என்னை எனது தந்தையின் வாப்பா எடுத்து வளர்த்தர். அதன் பின் கஸ்டம் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று 08 வருடங்கள் தொழில் புரிந்து பின் நாட்டிற்கு வந்து ரகுமானை 2004 ஆம் ஆண்டு திருமணம் முடித்தேன். தற்போது எனக்கு 04 பிள்ளைகள் உண்டு எனவும் கூறினார். சம்பவம் நடைபெற்ற அன்று எனது கணவர் என்னிடம் வந்து (கடவுச்சீட்டு அடையாள அட்டை உடைகள்) எல்லாவற்றையும் கேட்டார். எதற்கு என நான் கேட்டபோது கொழும்பிற்கு ரயல் காட்டுவதற்கு செல்கின்றேன் என கூறி எடுத்து சென்று விட்டார்.
21.05.2013 அன்று காலை நான் சமூர்த்தி வங்கிக்கு செல்லும் போது எல்லோரும் என்னிடம் உனது கணவர் ஒரு பிள்ளையை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் இது தெரியாதா? என்று கேட்டார்கள். அதன் பின்பு நான் எனது கணவரை தேடி செல்லும்போது அவர் வளத்தாப்பிட்டியில் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தார். உடனே அவ்விடத்திற்கு சென்று அவரை கட்டிப்பிடித்தேன் ஆனால் அவர் என்னை தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
பின்பு என்னிடம் பொலிஸ் அதிகாரிகள் வந்து விசாரித்து உனது கணவர் சிறையில் உள்ளார். எனக் கூறினார்கள். நான் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று அவரை பார்த்து விட்டு வந்துள்ளேன். எதிர்வரும் 04ம் திகதி நீதிமன்றத்திற்கு கொண்டு வருவார்கள் ஆனால் எனது கணவர் ஒரு குற்றமும் செய்யவில்லை அவர் நல்லவர் ஏதோ இறைவன் அவரை காப்பாற்றுவார் எனக் கூறினார்.
பாதிக்கப்பட்ட பிள்ளையின் வீட்டிற்கு சென்ற போது
பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை கூறுகையில் எனது பிள்ளை வைத்தியசாலையில் உள்ளார். எனது பிள்ளையை ரகுமான் என்பவனே மாற்றி இல்லாத பொய்களை சொல்ல வைத்திருக்கிறான் என்றார். தான் அவர்களை தேடித்தேடி எனது வாகனமும் உடைந்து விட்டது என்றும் கூறினார்.
அதிகாரி கூறுகையில் யார் என்ன சொன்னாலும் நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிபதிக்கு முன்னால் பொய்வார்த்தை ஒன்றும் வராது எல்லாம் உண்மை தான் வரும் என்றும் நாங்கள் என்ன தான் சொன்னாலும் சட்டவைத்திய அதிகாரி(துஆழு) யின் அறிக்கை வந்த பின்புதான் சரியான தீர்வினைப்பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !