தமிழகத்தில் தலைவா என்று படப்பெயர் வைத்தால்தானே நிச்சயமாக பெரும் சிக்கலை ஒன்றை எதிர்கொண்டே ஆக வேண்டியதிருக்கிறது என்பதே சினிமா உலகின் ‘சென்டிமென்ட்டாக’ இருக்கிறது. தமிழ் சினிமா உலகத்தின் சென்டிமென்ட்டுகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அப்பப்பா நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு எல்லாம் நீளும். அதில் ஒன்றுதான் இந்த ‘தலைவா’ பட டைட்டிலும்கூட. ‘தலைவா’ படத்தின் பெயரை வைத்துக் கொண்டு படத்தை வெளியிடாமல் விஜய் தவியாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த தலைவா சென்டிமென்ட் இப்போ ‘தலை’ தூக்கியிருக்கிறது.
தலைவான்னு பேரு வச்சதில் இருந்தே ஆரம்பித்துவிட்டது சர்ச்சை.
படம் திரையிடப்படும் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தான் திரையரங்க உரிமையாளர்கள் தலைவா படத்தை வெளியிட மறுத்ததன் காரணம் என முதலில் அறியபட்டாலும், கேளிக்கை வரி சலுகை கிடைக்காமல் போனதால் வசூலில் 28% கேளிக்கை வரிக்காக கொடுக்க வேண்டியிருக்கும் அதனால் போட்ட முதலை கூட எடுக்க முடியாது என தமிழக தியேட்டர் அதிபர்கள் தயங்குவதாலும் படம் வெளியாகவில்லை என்ற தகவலும் வந்தது.
இன்று வெளி வந்த வீடியோ பேச்சு ஒன்றில் விஜய் அதிமுக அடிப்படை தொண்டரை போலயே பேசியுள்ளார். அடையாளம் தெரியாத சிலரின் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படம் வெளியாவது தடைபட்டிருக்கிறது, உங்களை போலவே நானும் ஒவ்வொரு நாளும் படம் வெளியாகிவிடும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன், எனது மற்ற படங்கள் வெகு சிறப்பாக வந்திருந்தாலும் அதை பற்றி நான் எங்கேயும் பேசியதில்லை. இப்படம் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அம்மா சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், அவர் மீது என்றும் எனது மதிப்பும், மரியாதையும் குறையாது, அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கிறேன், சுதந்திரதின விழா ஏற்பாடுகளில் இருப்பதால் இன்னும் இரண்டொரு நாளில் சந்திப்போம் என நம்புகிறேன், அம்மா அவர்கள் மனசு வைத்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு சுமூக முடிவு கிடைக்கும். எப்படியும் இன்னும் சில தினங்களில் படம் வெளியாகிவிடும் என்பதால் யாரும் திருட்டு டி.வி.டியில் பார்த்து அதை ஊக்குவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !