ஐபோனின் திரையில் ஏற்பட்ட வெடிப்பினால் அதிலிருந்து வெளியேறிய கண்ணாடித் துகள்கள் தனது கண்ணைத் தாக்கியதாக சீனப் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்பெண்ணின் ஐபோன் 5விலேயே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தின் டலியான் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தான் சுமார் 40 நிமிடங்கள் அழைப்பொன்றில் இருந்ததாகவும் இதன்போது தனது ஐபோன் சூடாகுவதை உணர்ந்ததையடுத்து அழைப்பை துண்டிப்பதற்கு முயன்றதாகவும் இதன் போது திரை ஒழுங்காக செயற்படவில்லையெனவும், இதனையடுத்து போனின் வலதுப்பக்க மேல் மூலையில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதன்போது வெடித்துச் சிதறிய கண்ணாடித்துகள் தனது கண்ணைத் தாக்கியதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்பெண்ணை பரிசோதித்த வைத்தியர் அவரது கண்ணின் மணியில் கீறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குறித்த பெண் ஐபோனை கொள்வனவு செய்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் நஷ்ட ஈடு எதனையும் கோரப்போவதில்லையெனத் தெரிவித்துள்ள குறித்த பெண் ஐபோன் பாவனையாளர்கள் தனது போன்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென எச்சரித்துள்ளார்.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதேபோன்ற சம்பவங்கள் சில பதிவாகின.
சீனாவில் தனது ஐபோனை ரீசார்ஜ் செய்யும் போது கதைத்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் அது வெடித்தமையினால் உயிரிழந்த சம்பவம் அதில் ஒன்றாகும்.
அதேபோல் சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஐபோன் மட்டுமன்றி செம்சுங்கின் கெலக்ஸி ஸ்மார்ட் போன்களும் வெடிப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாகுவது வழமை.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவரின் காற்சட்டைப் பையிலிருந்த செம்சுங் கெலக்ஸி எஸ்3 ஸ்மார்ட் போன் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளமை தொடர்பான தகவல் வெளியாகியிருந்தது.
பெனி ஸ்கிலெட்டர் என்ற 18 வயதான யுவதியின் எஸ்3 ஸ்மார்ட் போனே இவ்வாறு வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனால் குறித்த பெண்ணின் வலது தொடைப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் அவருக்கு உணர்வேதும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி.
தொடர்புடைய செய்தி.
Home »
Technology
» ஐபோன் வெடிப்பினால் கண்ணில் காயம்: அதிகரித்து வரும் ஆபத்துகள்!
ஐபோன் வெடிப்பினால் கண்ணில் காயம்: அதிகரித்து வரும் ஆபத்துகள்!
Written By TamilDiscovery on Wednesday, August 14, 2013 | 7:19 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !