அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரும், தொழில்நுட்ப ஜாம்பவானுமாகிய மறைந்த ஸ்டீவ் ஜொப்ஸை எவராலும் அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியாது.
தொழில்நுட்ப உலகில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியன.
அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இந்நிலையில் அவரது மனைவியான லோரன் பவெல் ஜொப்ஸ் நபரொருவருடன் மீண்டும் காதலில் விழுந்ததாக தொழிநுட்ப உலகில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. வொஷிங்டன் டி.சியின் முன்னாள் மேயர் அட்ரியன் பெண்டியுடன் அவர் காதலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் கோடிஸ்வரியான லோரன் ஸ்டீவ் ஜொப்ச்ஸுடனான திருமணத்தின் போது அணிந்த மோதிரத்தை இதுவரை கழற்றாத போதிலும் அவரின் புதிய காதல் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. அட்ரியன் பெண்டியும் தனது மனைவியிடமிருந்து பிரிந்துள்ள நிலையில் விரைவில் இவர்கள் திருமண பந்தத்தில் இணைவார்கள் என சிலிகோன் வெலியினரால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !