வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக, இந்திய திட்ட கமிஷன் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புள்ளி விவரத்தின் படி 2011-12ம் ஆண்டில் 26 கோடியே 93 இலட்சம் பேர் தான் ஏழைகள் ஆவார். இது 2004-05ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 40 கோடியே 71 இலட்சத்தை விட இது குறைவானதாகும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 37.2%ஆக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை தற்போது 21.9ஆக குறைந்துள்ளது. சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் பரிந்துரை படி கிராமப்புறத்தில் தினமும் ரூ.27.20 (இந்திய ரூபாய்) செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையில்லை.
அதே போல் நகர்புறங்களில் ரூ.33.33 செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையாக கருதப்பட மாட்டார். சுரேஷ் டெண்டுல்கர் பரிந்துரைபடி ஏழைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குழுவின் மறு ஆய்வு செய்வதற்கு பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அறிக்கை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏழைகள் குறைந்து வருகின்றனராம்: திட்ட கமிஷன் புள்ளி விவரம்!
Written By TamilDiscovery on Wednesday, July 24, 2013 | 4:47 AM
Related articles
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
- அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !