ஜான் ஆப்ரஹாம், நர்கிஸ் பக்ரி, ரஷிகன்னா ஆகியோர் நடிப்பில் உருவான ‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் கடந்த 23-ம் திகதி இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார் இயக்கியிருந்தார்.
ஹிந்தியில் உருவான இப்படம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடத் தயாராக இருந்த நிலையில், படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. 1980-களின் இறுதியிலும், 90-களின் தொடக்கத்திலும் இலங்கையில் நடந்த உள்நாட்டு கலவரத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர்.
இதனால் இப்படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றம் படத்தை தமிழகத்தில் வெளியிட தடை செய்தது. திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை வெளியிட மறுத்தனர்.
தமிழகத்தில் இப்படம் வெளியிட முடியாமல் போனதால், தமிழ்நாட்டில் விநியோக உரிமையை வாங்கியவர்கள் சுமார் 1 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இப்படம் வெளியிட்ட இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் வாரத்தில் மட்டும் ரூ.21 கோடி வசூல் செய்துள்ளது. கூடிய விரைவில் படத்தை தமிழகத்திலும் வெளியிட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கோடி நஷ்டத்தை ஏற்ப்படுத்திய மெட்ராஸ் கபே!
Written By TamilDiscovery on Wednesday, August 28, 2013 | 9:27 PM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !