லண்டனில் நீதிமன்ற வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லிம் பெண்மணி, வழக்கு விசாரணைகளின் போது தனது முகத்திரையை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இருபத்து இரண்டு வயதான அந்தப் பெண்மணி தன் மீது தவறில்லை என்று வாதிடுவதற்காக நீதிமன்றம் வந்தபோது, முகத்தை மறைக்கும் நிக்காபை அணிந்து வந்திருந்தார்.
முகத்திரையை நீக்கச் சொல்வது அவரது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்ட பிறகு, நீதிமன்றத்துக்குள் நுழைவதற்கு முன்னர் மகளிர் பொலிஸின் ஒரு அதிகாரியால் அவர் தனிமையான ஒரு இடத்தில் அடையாளம் காணப்பட்டார்.
ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்தில், சாட்சியமளிக்கும் போது அவர் முகத்திரையை நீக்கினால்தான் அவரது பிரதிபலிப்புகளை கவனிக்க முடியும் என்று நீதிபதி முடிவு செய்து உத்தரவிட்டார்.
பிரிட்டனில், இஸ்லாமிய உடைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் தொடர்பில் பாரம்பரியமாகவே ஒரு சகிப்புத்தன்மை உள்ளது.
மேலும் முகத்தை மறைக்கும் வகையில் உடை அணியக் கூடாது என்றும் இப்போது சட்டங்கள் ஏதும் பிரிட்டனில் இல்லை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !