
நூற்றாண்டு விழாவையொட்டி 21–ந் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ், நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் 22–ந் திகதி காலை கன்னட நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 22–ந் திகதி மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23–ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கின்றன.
நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல்அகர்வால், ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகின்றனர்.
நூற்றாண்டு விழாவை யொட்டி சினிமா படப்பிடிப்புகள் நாளை முதல் 24–ந் திகதி வரை 7 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. வெளியூர் படப்பிடிப்புகளில் இருக்கும் நடிகர் நடிகைகள் இன்று இரவே சென்னை திரும்புகிறார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !