தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி படகு மூலப்பட்டுச் சென்ற 88 பேரை அண்மையில் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இந்த 88 பேரில் குறித்த புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரும் உள்ளடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஆரியனந்தன் பார்த்தீபன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலகக் குழுத் தலைவர் இத்தாலியில் கைது:
இலங்கைப் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதீவ் தேவ நதுன் தர்மவிக்ரம என்னும் 42 வயதான கொஸ்கொட நதுன் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் மிலான் வெனித்தியா பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக குறித்த நபர் கருதப்படுகின்றார். சந்தேக நபருக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேரை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Home »
Sri lanka
» முன்னாள் விடுதலைப் புலி முக்கிய உறுப்பினர் கைது: இன்டர்போல் பிடிவிராந்து மூலம் பாதாள உலகக் குழுத் தலைவர் இத்தாலியில் கைது!
முன்னாள் விடுதலைப் புலி முக்கிய உறுப்பினர் கைது: இன்டர்போல் பிடிவிராந்து மூலம் பாதாள உலகக் குழுத் தலைவர் இத்தாலியில் கைது!
Written By TamilDiscovery on Friday, June 21, 2013 | 11:47 PM
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !