தென்கொரியாவைச் சேர்ந்த தனது சக நிறுவனமான செம்சுங்கின் பிரமாண்ட விம்பத்தினால் பலரும் எல்.ஜி.யை மறந்து போனார்கள்.
ஆனாலும் எல்.ஜி. அடிக்கடி செம்சுங்கின் விம்பத்தை உடைக்கும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் விளைவே இவ் வருடத்தின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் 12 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விநியோகம்செய்துள்ளது. அது போல அண்ட்ரோய்ட் போன்களை வெளியிடும் இரண்டாவது மிகப் பெரும் நிறுவனமாகத் திகழ்கின்றது.
இந்நிலையில் செம்சுங்கின் எஸ்4 ஸ்மார்ட்போனுக்கு சவால் விடும் வகையில் புதிய ஸ்மார்ட் போனொன்றை எல்.ஜி. அறிமுகப்படுத்தியுள்ளது.
G2 எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த மாதிரியானது பல வசதிகளைக் கொண்டுள்ள இது தோற்றத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுள்ளது.
ஆம் volume மற்றும் power பட்டனை பின்பகுதியில் கொண்டுள்ளது G2 . இது தற்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமானது.
volume பட்டனை கீழ் நோக்கி அழுத்துவதன் மூலம் கமெரா இயங்கத் தொடங்கும், அதேபோல் மேல் நோக்கி அழுத்துவதன் மூலம் Quick Memo எனப்படும் நோட்களை பதிவுசெய்யும் அப்ளிகேசன் திறக்கப்படும்.
இதுதவிர "Knock On" எனப்படும் திரை ஓய்வடைந்ததுடன் அதன் மீது இரண்டு தடவை தட்டும் போது மீண்டும் திரை விழிப்படையும் வசதியையும் G2 கொண்டுள்ளது.
5.2 அங்குல full HD திரையைக் கொண்டுள்ளதுடன், uad-core Qualcomm Snapdragon 800 processor மூலம் இயங்குகின்றது. இது குவால்கொம்மின் அதி உயர் சிப்பைக் கொண்ட ஸ்மார்ட் போன் G2 என்பது குறிப்பிடத்தக்கது.
தோற்றத்தில் பெரிய ஸ்மார்ட் போன்கள் volume மற்றும் power பட்டன்களை இரு பக்கவாட்டில் கொண்டுள்ளமை பாவனையாளர்களுக்கு சிரமமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதை கருத்தில் கொண்டே இம்முடிவை எல்.ஜி. மேற்கொண்டுள்ளது.
இதன் தொழில்நுட்ப அம்சங்கள் சில:
General: Quad-band GSM/GPRS/EDGE, quad-band UMTS/HSPA, penta-band LTE support, LTE-Advanced.Form factor: Touchscreen bar phone.
Dimensions: 138.5 x 70.9 x 8.9 mm, 143g.
Display: 5.2" 16M-color 1080p (1920 x 1080 pixels) power efficient capacitive touchscreen IPS LCD with Gorilla Glass 3 and ~424 ppi and 450 nit brightness, extremely narrow bezels (2.65 mm)
CPU: Quad-core 2.3 GHz Krait 400.
GPU: Adreno 330.
Chipset: Snapdragon 800 chipset.
RAM: 2GB.
OS: Android 4.2.2 Jelly Bean.
Memory: 16/32GB storage, micro SD card slot (region-specific availability of the slot)
Cameras: Primary 13 MP auto-focus optically-stabilized camera, 8X digital zoom, face detection, HDR mode, panorama, geo-tagging; Full HD (1080p) video recording at 60fps, Secondary 2.1 MP front-facing camera with FullHD video capture.
Connectivity: Dual-band Wi-Fi a/b/g/n/ac, Wi-Fi hotspot, Bluetooth 4.0 LE, standard micro USB port with MHL and USB host, GPS receiver with A-GPS, GLONASS, 3.5mm audio jack, NFC, wireless screen sharing (Miracast protocol)
Misc: Camera has sapphire glass cover, customizable system key (can assign different functions to back, home, menu buttons); tap twice on the screen to turn it on and off.
Battery capacity: 3,000mAh Li-Po unit (2,610mAh in some markets)
தொழில்நுட்ப அம்சங்கள், புதிய வசதிகள் அனைத்தும் கவரும் வண்ணமாகவும், நுகர்வோரை திரும்பிப் பார்க்கும் வகையிலும் உள்ளன. ஆனாலும் செம்சுங்கின் கெலக்ஸி எஸ்4 வினை விற்பனையில் முந்துமா என சற்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !