கங்காருக் குட்டி ஒன்று நபரொருவருடன் நெருங்கி பழகும் செயற்பாடு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பூங்காவிலேயே இவ் விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பூங்காவில் உள்ள மிருகக் காட்சிசாலை ஒன்றில் கங்காரு குட்டி ஒன்று பிறந்து 7 மாதங்களிலேயே தனது தாயை இழந்ததுள்ளது.
இந்நிலையில் அநாதரவான நிலையில் தவித்த இக்கங்காருக் குட்டி, வளர்ந்து ஏனைய கங்காருக்களுடன் சகஜமாக பழகும் வரை தனது பராமறிப்பில் வளர்ப்பதென அம் மிருகக் காட்சிசாலையின் பராமறிப்பாளரான லுகி சிமோண்டர் என்பவர் தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய அக்கங்காருக் குட்டிக்கு பெபல்ஸ் என பெயரிட்டு அவர் அதனை அன்புடன் பராமறித்து வந்துள்ளார்.
இதற்கமைய ஓரளவு வளர்ந்தள்ள பெபல்ஸ் தற்போது சிமோண்டருடன் இணைந்து தொலைக்காட்சி பார்க்கும் அளவிற்கு சிமோண்டுடன் நட்பாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
'சிலநேரங்களில் விலங்குகளின் பரமாறிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பெபல்ஸ் வளரும் வரை இவ்வாறு பராமறிக்க வேண்டியுள்ளது' என சிமோண்டோ ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !