Headlines News :
Home » , » 19 பில்லியன் கி.மீ. தூரத்தில், 'ஏலியன்களை' கவர அண்டவெளியில் இசைக்கும் ஒலிகள்!

19 பில்லியன் கி.மீ. தூரத்தில், 'ஏலியன்களை' கவர அண்டவெளியில் இசைக்கும் ஒலிகள்!

Written By TamilDiscovery on Monday, September 16, 2013 | 8:18 AM

36 ஆண்டு காலம் பயணம் செய்து நமது சூரிய குடும்பத்தைக் கடந்து அண்டவெளியில் நுழைந்துள்ள அமெரிக்காவின் வாயேஜர்-1 விண்கலம், அந்த 'ஆழ்நிசப்த' மண்டலத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தானி இசையை ஒலிபரப்பியுள்ளது.

சூரிய மண்டலத்தைத் தாண்டிச் சென்றுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வாயேஜர் 1, வாயேஜர் 2:
வெறுமையான இந்த அண்டவெளியை (Interstellar space) அயனி நிலையிலான (ionized state) ஹைட்ரஜன், ஹீலியம், நியூட்ரினோக்கள் (இவை சூரியனி்ல் நடக்கும் அணு இணைப்பால் உருவாகும் துணை அணு துகள்கள்), மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை தான் நிரப்பியுள்ளன. வாயேஜர்-1 விண்கலத்துடன் சேர்த்து ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலமும் அந்தப் பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது.

சூரியனின் கோள்களின் ரகசியங்களை கண்டுபிடித்துவிட்டு:
அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் உருவாக்கிய வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 விண்கலங்கள் 1977ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. வாயேஜர்-1 விண்கலம் ஜூபிடர், சனி கிரகங்களை சுற்றிவிட்டும், வாயேஜர்-2 விண்கலம் யுரேனஸ், நெப்டியூன் கிரங்களுக்கு அருகே சென்று படம் பிடித்துவிட்டும் இப்போது இந்த அண்டவெளியை அடைந்துள்ளன. இந்த இரு விண்கலங்களும் ஜூபிடர் (வியாழன் கிரகம்), சனி, யுரானஸ், நெப்டியூனின் 23 நிலவுகளைக் கண்டுபிடித்தன, ஜூபிடரின் நிலவான 'லோ'-வில் வெடித்துச் சிதறும் எரிமலை, சனி கிரகத்தைப் போல ஜூபிடருக்கும் வளையங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தன.

கார்ல் சாகன்:
நெப்டியூனில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்கள், நியூட்டனின் நிலவான ட்ரைடனில் இருந்து நைட்ரஜன் வாயு அண்டவெளியில் பாய்வது, மேலும் ஜூபிடரின் நிலவான 'லோ'-விலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைத் துகள்கள் ஒன்று சேர்ந்து தான் ஜூபிடருக்கு வளையத்தை உருவாக்கியது என்ற உண்மையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன. அமெரிக்காவின் முன்னணி விண்ணியலாரான கார்ல் சாகன் தலைமையில் தான் இந்தத் திட்டம் உருவானது. அப்போது அண்டவெளியில் ஒலிபரப்ப உலகம் முழுவதும் இருந்தும் பல இசைகள் தேர்வு செய்யப்பட்டன.

ஹிந்துஸ்தானி இசை:
இதில் இந்தியாவில் இருந்து கேசர் பாய் கேர்கர் பாடிய 'Jaat kahan ho' என்ற ஹிந்துஸ்தானி பாடலை தேர்வு செய்தார் கார்ல் சாகன். கேசர் பாய் கேர்கர் கோவாவைச் சேர்ந்தவர் ஆவார். இந்தக் கட்டுரையை எழுதி முடித்தபோது பூமியில் இருந்து 18,783,364,273 கி.மீ. பயணித்துவிட்ட வாயேஜர்-1 இந்தப் பாடலை சமீபத்தில் ஒலிபரப்பியது. அதாவது பூமியில் இருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில் இந்தப் பாடல் ஒலிபரப்பானது.

34 ஆண்டு பயணம்:

December-2011, இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.

பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்?. வெறுமையான அண்டவெளி (Interstellar space) தான்.

இந்த அண்டவெளியில் கோள்களோ, நட்சத்திரங்களோ, எரிகற்களோ எதுவுமே இருக்காது. இந்தப் பகுதியை முழுக்க முழுக்க வெறுமையான பகுதி என்று சொல்லிவிட முடியாது. மிக 'கனமான' வெற்றிடம் என்று சொல்லலாம். இந்த வெற்றிடத்துக்கு 'கனம்' எங்கிருந்து வருகிறது?. அயனி நிலைக்குத் தள்ளப்பட்ட (ionized state) ஹைட்ரஜன், ஹீலியம், நியூட்ரினோக்கள் (இவை சூரியனி்ல் நடக்கும் அணு இணைப்பால் உருவாகும் சப் அடாமிக் பார்ட்டிகிள்), மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை தான் இந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ள விஷயங்கள்.

இந்தப் பகுதிக்குள் தான் நுழைந்துள்ளது வாயேஜர்-1 விண்கலம். ஏவப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பகுதியை அடைந்துள்ளது வாயேஜர்-1, இதனோடு சேர்த்து ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலமும் அந்தப் பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் உருவாக்கிய வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 விண்கலங்கள் 1977ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. வாயேஜர்-1 விண்கலம் ஜூபிடர், சனி கிரகங்களை எட்டிப் பார்த்துவிட்டும், வாயேஜர்-2 விண்கலம் யுரேனஸ், நெப்டியூன் கிரங்களுக்கு அருகே சென்று படம் பிடித்துவிட்டு இப்போது அண்டவெளியை அடைந்துள்ளன. இதில் வாயேஜர்-1 2011. 12. 20, தேதியில் பூமியிலிருந்து 17,000 கோடி கி.மீ. தூரம் பயணித்துவிட்டது. இன்னொரு பாதையில் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ள வாயேஜர்-2 சுமார் 14,000 கோடி கி.மீ. தூரத்தைக் கடந்துவிட்டது. அதாவது, இவை இரண்டுமே ஒரு நொடிக்கு 5 கி.மீ. தூரம் என்ற வேகத்தில் பறந்து கொண்டுள்ளன. இந்த இரு விண்கலங்களுமே இன்னும் பூமிக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டுள்ளன என்பது தான் இதில் மிகவும் முக்கியமான விஷயம்.

இந்த 33 ஆண்டுகளில் இந்த இரு விண்கலங்களும் ஜூபிடர் (வியாழன் கிரகம்), சனி, யுரானஸ், நெப்டியூனின் 23 நிலவுகளைக் கண்டுபிடித்தன, ஜூபிடரின் நிலவான 'லோ'-வில் வெடித்துச் சிதறும் எரிமலையைக் கண்டுபிடித்தன, சனி கிரகத்தைப் போல ஜூபிடருக்கும் வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்தன, நெப்டியூனில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்களைக் கண்டுபிடித்தன, நியூட்டனின் நிலவான ட்ரைடனில் இருந்து நைட்ரஜன் வாயு அண்டவெளியில் பாய்வதைக் கண்டுபிடித்தன. மேலும் ஜூபிடரின் நிலவான 'லோ'-விலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைத் துகள்கள் ஒன்று சேர்ந்து தான் ஜூபிடருக்கு வளையத்தை உருவாக்கியதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.

மேலும் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் அனைத்தும் பல்வேறு சிறிய வளையங்களால் ஆனவை என்பதும், இதில் 'எப்' என்ற வளையத்தை இரு சிறிய துணைக் கோள்கள் கட்டுப்படுத்துவதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன. மேலும் சனி கிரகத்தின் இந்த வளையங்களில் அலைகள் இருப்பதும், இந்த கிரகத்தின் நிலவுகளால் தான் இந்த அதிர்வு அலைகள் உருவாவதையும் இந்த விண்கலங்கள் கண்டுபிடித்தன. இதை வைத்து அந்த வளையங்களின் எடையையும் கூட நாஸாவால் கணக்கிட முடிந்தது.

வழியில் வேற்றுகிரகவாசிகள் யாராவது இந்த விண்கலங்களைக் காண நேர்ந்தால், பூமியைப் பற்றிய தகவல்களை அவர்களுக்கு சொல்லும் வகையில், இந்த விண்கலத்தில் மனிதர்களின் படங்கள், பூமியின் படங்கள், சூறாவளி, கடல் அலைகளின் சத்தம், பறவைகளின் ஓசை, இசை என பலவகைப்பட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன!

1990ம் ஆண்டில் சூரிய குடும்பத்தின் கடைசி கோளான புளுட்டோவைக் கடந்த இந்த விண்கலங்கள், இந்த (December. 20. 2011) மாத துவக்கத்தில் "heliosheath" என்ற நமது சூரியனின் கதிர்வீச்சுகள் தொடும் அதிகபட்ச தூரத்தை எட்டியுள்ளன. இந்தப் பகுதியைத் தாண்டிவிட்டால், சூரிய கதிர்வீச்சுக்கள் கூட இருக்காது, அதாவது நமது சூரியனின் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை தாண்டிவிட்டதாக அர்த்தம்.

இந்த விண்கலங்கள் இன்னும் 2,96,000 வருடங்களுக்கு சேதமடையாமல் பயணித்தால் தான் வானிலேயே மிக பிரகாசமான நட்சத்திரமான சிரியசிலிந்து (Sirius) 37 டிரில்லியன் கி.மீ. தூரத்தை இவை அடைய முடியும். இப்போது புரிகிறதா.. இந்த அண்டவெளி எப்படி விரிந்து கிடக்கிறது என்று! (ஏலவே குறிப்பிடப்பட்டுள்ளன, 34 ஆண்டு பயணம்: இவை 2011ஆம் ஆண்டுக்குரிய கணக்கீடுகள்)

Voyager 1 Has Left the Solar System:

Sept. 12, 2013:  NASA's Voyager 1 spacecraft officially is the first human-made object to venture into interstellar space. The 36-year-old probe is about 12 billion miles (19 billion kilometers) from our sun.

New and unexpected data indicate Voyager 1 has been traveling for about one year through plasma, or ionized gas, present in the space between stars. Voyager is in a transitional region immediately outside the solar bubble, where some effects from our sun are still evident. A report on the analysis of this new data, an effort led by Don Gurnett and the plasma wave science team at the University of Iowa, Iowa City, is published in Thursday's edition of the journal Science.

"Now that we have new, key data, we believe this is mankind's historic leap into interstellar space," said Ed Stone, Voyager project scientist based at the California Institute of Technology, Pasadena. "The Voyager team needed time to analyze those observations and make sense of them. But we can now answer the question we've all been asking -- 'Are we there yet?' Yes, we are."

Voyager 1 first detected the increased pressure of interstellar space on the heliosphere, the bubble of charged particles surrounding the sun that reaches far beyond the outer planets, in 2004. Scientists then ramped up their search for evidence of the spacecraft's interstellar arrival, knowing the data analysis and interpretation could take months or years.

Voyager 1 does not have a working plasma sensor, so scientists needed a different way to measure the spacecraft's plasma environment to make a definitive determination of its location. A coronal mass ejection, or a massive burst of solar wind and magnetic fields, that erupted from the sun in March 2012 provided scientists the data they needed. When this unexpected gift from the sun eventually arrived at Voyager 1's location 13 months later, in April 2013, the plasma around the spacecraft began to vibrate like a violin string. On April 9, Voyager 1's plasma wave instrument detected the movement. The pitch of the oscillations helped scientists determine the density of the plasma. The particular oscillations meant the spacecraft was bathed in plasma more than 40 times denser than what they had encountered in the outer layer of the heliosphere. Density of this sort is to be expected in interstellar space.

The plasma wave science team reviewed its data and found an earlier, fainter set of oscillations in October and November 2012. Through extrapolation of measured plasma densities from both events, the team determined Voyager 1 first entered interstellar space in August 2012.

"We literally jumped out of our seats when we saw these oscillations in our data -- they showed us the spacecraft was in an entirely new region, comparable to what was expected in interstellar space, and totally different than in the solar bubble," Gurnett said. "Clearly we had passed through the heliopause, which is the long-hypothesized boundary between the solar plasma and the interstellar plasma."

The new plasma data suggested a timeframe consistent with abrupt, durable changes in the density of energetic particles that were first detected on Aug. 25, 2012. The Voyager team generally accepts this date as the date of interstellar arrival. The charged particle and plasma changes were what would have been expected during a crossing of the heliopause.

"The team’s hard work to build durable spacecraft and carefully manage the Voyager spacecraft's limited resources paid off in another first for NASA and humanity," said Suzanne Dodd, Voyager project manager, based at NASA's Jet Propulsion Laboratory, Pasadena, Calif. "We expect the fields and particles science instruments on Voyager will continue to send back data through at least 2020. We can't wait to see what the Voyager instruments show us next about deep space."

Voyager 1 and its twin, Voyager 2, were launched 16 days apart in 1977. Both spacecraft flew by Jupiter and Saturn. Voyager 2 also flew by Uranus and Neptune. Voyager 2, launched before Voyager 1, is the longest continuously operated spacecraft. It is about 9.5 billion miles (15 billion kilometers) away from our sun.

Voyager mission controllers still talk to or receive data from Voyager 1 and Voyager 2 every day, though the emitted signals are currently very dim, at about 23 watts -- the power of a refrigerator light bulb. By the time the signals get to Earth, they are a fraction of a billion-billionth of a watt. Data from Voyager 1's instruments are transmitted to Earth typically at 160 bits per second, and captured by 34- and 70-meter NASA Deep Space Network stations. Traveling at the speed of light, a signal from Voyager 1 takes about 17 hours to travel to Earth. After the data are transmitted to JPL and processed by the science teams, Voyager data are made publicly available.

“Voyager has boldly gone where no probe has gone before, marking one of the most significant technological achievements in the annals of the history of science, and adding a new chapter in human scientific dreams and endeavors,” said John Grunsfeld, NASA’s associate administrator for science in Washington. “Perhaps some future deep space explorers will catch up with Voyager, our first interstellar envoy, and reflect on how this intrepid spacecraft helped enable their journey.”

Scientists do not know when Voyager 1 will reach the undisturbed part of interstellar space where there is no influence from our sun. They also are not certain when Voyager 2 is expected to cross into interstellar space, but they believe it is not very far behind.

by: NASA.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template