யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக பல இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா ஒரே தடவையில் நேற்று பிற்பகல் பொலிசாரினால் பிடிக்கப்பட்டுள்ளது.
மாதகல் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சிறிய குடிசை வீடொன்றில் உள்ள வைக்கோல் பட்டறையின் கீழ் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கேரளத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 கிலோ 600 கிராம் பெறுமதியான கஞ்சா இளவாலைப் பொலிசாருக்கு கிடைத்தகவலின் அடிப்படையில தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட குடிசையில் வாழ்ந்து வந்த திருமணம் செய்யாத சகோதரனையும் சகோதரிரயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களும் மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ். தம்பிமுத்துவின் இல்லத்தில் இளவாலைப் பொலிசாரினால் ஆஜர் படுத்தப்பட்டதை அடுத்து இருவரையும் இரண்டு வார காலத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிடப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதல் தடவை யாழில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!
Written By TamilDiscovery on Sunday, July 14, 2013 | 5:56 AM
Related articles
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !