இளவரசன் இறப்பதற்கு முன்பு அவரது பெற்றோருக்கும், காதல் மனைவி திவ்யாவுக்கும் எழுதிய 4 பக்க கடிதம் சிக்கியது. அதில் தன்னுடைய சாவுக்கு நானே காரணம் என்றும், வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு இளவரசன் எழுதிய கடிதம் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் முன்னிலையில் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் மற்றும் அரூர் துணை பொலிஸ் சூப்பிரண்டு சம்பத் ஆகியோர் இளவரசனின் பெற்றோர் இளங்கோ-கிருஷ்ணவேணி, உறவினர்கள் ஜோசப், அறிவழகன், நத்தம் காலனியைச் சேர்ந்த ஊர் பெரியவர் சின்னத்தம்பி, இளவரசனின் அக்காள் திலகவதி. அவரது கணவர் சரவணன் ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த கடிதத்தை இளவரசன் எழுதினானா? என்பது சந்தேகமாக இருக்கிறது என்று அவரது தந்தை இளங்கோ கூறினார். இதை கண்டறிய சென்னையில் உள்ள தடயவியல் துறைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
ஏற்கனவே இளவரசன் நோட்டுகளில் எழுதி இருந்த கையெழுத்தும், கடிதத்தில் உள்ள இளவரசன் எழுதிய வாசகங்களும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தடயவியல்துறை நிபுணர்கள் ஆய்வு செய்து கடிதம் எழுதியது இளவரசன்தான் என்பதை உறுதி செய்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !