Headlines News :
Home » » அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Written By TamilDiscovery on Sunday, October 20, 2013 | 8:37 PM

இந்தியாவின் மும்பையில் ஒரு இளம்பெண்ணை வற்புறுத்தி ஆசிட் குடிக்க செய்து பின்னர் அவரை கடலில் தள்ளிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பை டஹிசார் பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக, ஜிதேந்திர சக்பல் என்னும் 20 வயது நபர் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இது தொடர்பாக இளம்பெண் அவளது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அந்த நபர் மீது பொலிசில் புகார் அளித்தனர்.

அந்த நபரை விசாரித்த பொலிசார், இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டி எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், அப்பெண் வீடு திரும்புவதை பார்த்த ஜிதேந்திர சக்பல், அவரை வழிமறித்து ஆசிடை குடிக்கசெய்து, பின்னர் அவரை கடலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

பொலிசாரால் மீட்கப்பட்ட அந்த பெண் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template