‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி' என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தந்த தலைவன் ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுமே ஒரு தனிச்சிறப்புக் கொண்டிருந்தது. அமெரிக்காவினுடைய முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக வாழ்க்கைத் தொடங்கிய இவர் பின்னாளில் அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர். ஆபிரகாம் லிங்கனின் வாழ்வில் நடந்த 7 முக்கிய நிகழ்ச்சிகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் நடந்தேறியது உண்மையிலேயே ஒரு அதிசயமான செயல் தான்.
ஞாயிற்றுக் கிழமை:
1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.
திங்கட்கிழமை:
1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார் ஆபிரகாம் லிங்கன். அது ஒரு திங்கட்கிழமை.
செவ்வாய்க்கிழமை:
குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதியாக லிக்கன் அறிவிக்கப்பட்டது ஒரு புதன்கிழமை.
புதன்கிழமை:
தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றையெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் குறிப்பிட்ட லிங்கனுக்கு தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். அவர் பார்கவுன்சிலில் இடம்பெற்ற நாள் ஒரு புதன்கிழமை.
வியாழக்கிழமை:
ஆபிரஹாம் லிங்கன் தனது உலகப் புகழ் பெற்ற ‘கெட்டிஸ்பர்க்' உரையை நிகழ்த்தியது ஒரு வியாழக்கிழமை.
வெள்ளிக்கிழமை:
1865 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ந்தேதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் "அவர் அமெரிக்கன் கசின்" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான்.
சனிக்கிழமை:
குண்டடி பட்ட லிங்கன் மறுநாள் அதாவது, சனிக்கிழமை காலை மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 56. வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது.
லிங்கன் இல்லை:
லிக்கன் மறைவுக்குப்பின் பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !