அவிசாவளை - தெரணியகல நூரி தோட்டத்தின் முகாமையாளர் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் வசிக்கும் சிலரே இக்கொலையை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் குறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வயதான முகாமையாளரின் காவலாளிகள் மூவர் சம்பவத்தில் படுகாயமடைந்து தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடாத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !